பியூட்டி பார்லருக்கு செலவு செய்த பணத்தை கூட தொகுதிக்காக செலவு செய்யாதவர் தான் ஜோதிமணி - நடிகை விந்தியா

By Velmurugan s  |  First Published Mar 29, 2024, 7:13 PM IST

பியூட்டி பார்லருக்கு செலவு செய்த தொகையைக் கூட தொகுதிக்காக செலவு செய்தாவர் தான் ஜோதிமணி என நடிகை விந்தியா கரூர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம்.


கரூர் அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து திரைப்பட நடிகையும், அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளருமான நடிகை விந்தியா ஆங்காங்கே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது, கரூர் மக்கள் இந்த முறை உஷாராக இருக்க வேண்டும். பொய்யான விளம்பரங்களையும், பொய்யான வாக்குறுதிகளையும் நம்பி வாக்களிக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

Tap to resize

Latest Videos

undefined

கரூர் கடுமையான உழைப்புக்கும், கைத்தறி தொழிலுக்கும், நேர்மைக்கும் புகழ்பெற்ற உரையிடம். இந்த கரூர் மன்னர்கள் ஆண்ட பசுமைக்கலன் பூமி இந்த மக்கள் மத்தியில் பேசுவதில் பெருமை கொள்கிறேன். கரூரில் இரண்டாவது முறையாக எம்பி வேட்பாளராக திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஜோதிமணி இதை நினைத்தாலே மக்களுக்கு வேதனையாக உள்ளது.

நான் வெற்றி பெற்றால் தான் தொகுதிக்கு தேவையானதை பிரதமரிடம் கேட்டு பெறமுடியும்; தீவிர வாக்கு சேகரிப்பில் சௌமியா அன்புமணி

5 வருடம் கரூர் தொகுதி பக்கம் கூட திரும்பி பார்க்காதவர் ஜோதிமணி என இந்த தொகுதி மக்கள் வேதனையுடன் கூறினர். ஜோதிமணி எம்பி செந்தில் பாலாஜி வீட்டில் செக்யூரிட்டி வேலை பார்த்தார்கள். இந்த தொகுதிமக்களைப் பார்த்ததில்லை. அந்த எம்பி நிதியை வைத்துக்கொண்டு இந்தப் பகுதியில் எத்தனை ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், பள்ளிக்கூடங்களில் கழிவறை கட்டியிருக்கலாம். மார்க்கெட் நவீனமயமாக்கப்பட்டிருக்கலாம், சாலை அமைத்திருக்கலாம். 

ஆனால் ஜோதிமணி ஏதாவது செய்திருக்கிறாரா? இல்லை. ஜோதிமணி பியூட்டி பார்லர்களுக்கு செலவு செய்த பணத்தை கூட இந்ததொகுதிக்கு செலவு செய்யவில்லை. ஜோதிமணி மட்டும் பாலிஷ் ஆகிவிட்டார். தொகுதி மக்களை பற்றி அவருக்கு கவலை இல்லை. ஜோதிமணி உருப்படியாக செய்த ஒரு வேலை, ஒரே சாதனை என்ன கரூர் காங்கிரசை திமுகவிற்கு விற்றது தான். இன்றைக்கு நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் தொகுதியை சுற்றிப் பாருங்கள். கைச் சின்னத்தை கருப்பு சிவப்பு நிறத்தில் வரைந்து வைத்திருக்கிறார்கள். 

நிர்மலா சீதாராமனை யாசம் பெறுபவர்களோடு ஒப்பிட்டு பேசிய ஈவிகேஎஸ்; ஈரோட்டில் பரபரப்பு பேட்டி

இவர்கள் எந்த தைரியத்தில் மறுபடியும் வந்து மக்களிடம் ஓட்டு கேட்கப் போகிறார்கள்? ஜோதி மணியின் வீடியோ மிகவும் ட்ரெண்டிங்காக இருந்தது. தொகுதி மக்கள் அவர்களுடைய பிரச்சினை பற்றி பேசுவதற்கு ஜோதிமணியிடம் சென்றாள் எனக்கு டெல்லியில் வேலை இருக்கிறது என கிளம்பி செல்கிறார். மக்களை மதிக்காமல் மக்கள் எதற்காக ஓட்டு போட்டு? எதற்காக வெற்றி பெற வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கினார்கள்? இந்தப் பகுதி மக்களின் குறைகளை டெல்லியில் பொய் சொல்வார்கள் என்று தான். 

ஜோதிமணி டெல்லிக்கு சென்றவுடன் தனக்கு கொம்பு முளைத்தது போல நினைத்துக் கொண்டு இந்த மக்களையும், இந்த மண்ணையும் மதிக்காமல் காங்கிரஸ் கட்சியினரையே பிச்சைக்காரன் போல பார்க்கும் ஜோதிமணி டெல்லியில் சென்று சீட்டு வாங்கிவிட்டு வந்து மட்டும் காங்கிரஸ் கட்சியினர் வேலை பார்ப்பார்களா? ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று தீர்மானம் போட்டதே கரூர் காங்கிரஸ் கட்சியினர் தான். அவர்களா ஜோதி மணிக்கு வேலை பார்ப்பார்கள்? இல்லை கூட்டணி கட்சி திமுக வேலை பார்ப்பார்களா? திருட்டு திமுக காரர்கள் வேலை பார்த்தாலும் பார்ப்பார்கள் அவர்களை தயவு செய்து நம்பாதீர்கள். உங்கள் கரூர் தொகுதி வேட்பாளர் தங்கவேலுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

click me!