5 வருசமா உங்கள பாக்கவே இல்லையே; கரூரில் ஜோதிமணியை அலரவிட்ட பொதுமக்கள்

By Velmurugan sFirst Published Mar 28, 2024, 4:47 PM IST
Highlights

கரூரில் பிரசாரம் செய்த எம்.பி. ஜோதிமணிக்கு ஆரத்தி எடுக்க தயாராக இருந்த பெண் ஒருவர் 5 வருசமா உங்கள பார்க்கவே இல்லையே, இன்னைக்கு தான் வந்திருக்கீங்கனு கேள்வி எழுப்பியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக கூட்டணியோடு கை சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். ஜோதிமணியின் வெற்றிக்கு அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக பாடுபட்டு ஒவ்வொரு தெருவாக சென்று பிரசாரம் மேற்கொண்டார். ஆனால் வெற்றிக்கு பின் ஜோதிமண கூட்டணி கட்சியின், சொந்த கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி பொதுமக்களிடம் கூட எதிர்ப்பையே சம்பாதித்து வைத்திருந்தார்.

மேலும் ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என கரூரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு தரப்பு தீர்மானமே நிறைவேற்றியது. ஆனால், ஜோதிமணி டெல்லி வரை சென்று காங்கிரஸ் மேலிட நிர்வாகிகளிடம் பேசி மீண்டும் தனக்கான வாயப்பை உறுதி செய்து கொண்டார்.

ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி கையில் இருந்து 500, 1000ஐ பிடிங்கி விட்டனர்; கரூரில் ஜோதிமணிக்கு ஆதரவாக கனிமொழி பிரசாரம்

இதனைத் தொடர்ந்து ஜோதிமணி இன்று கோடங்கிபட்டி ஆதிதிராவிடர் தெரு பகுதியில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது ஆரத்தி எடுப்பதற்காக நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் ஐந்து வருடங்களாக உங்களைப் பார்க்கவில்லை. இப்பொழுது ஓட்டு கேட்க மட்டும் வந்திருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். 

வேட்பு மனு தாக்கலின் போது போலீசார் மீது வாகனத்தை ஏற்ற முயன்ற டிடிவி தினகரன்? போலீஸ் வழக்கு பதிவு

ஜோதிமணிக்கு பின்புறம் இருந்த திமுகவினர் அமைதியாக இருமா பேசிக்கலாம் என்று கூறிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எம்பி தேர்தல் வருவதற்கு முன்பாகவே பல்வேறு இடங்களில் ஜோதிமணிக்கு பொதுமக்களிடையே எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்பொழுது கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஜோதி மணியை வாக்கு சேகரிப்பின் போது ஐந்து வருடங்களாக உங்களை காணவில்லை எனக் கூறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

click me!