ஆஸ்கர் விருதை வென்ற இந்திய திரைப்படங்கள்..! மகத்தான சாதனை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

By Ajmal KhanFirst Published Mar 13, 2023, 11:09 AM IST
Highlights

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில்  சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடலுக்கும்,  சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் ‘The Elephant Whisperers’ விருதுகளை பெற்றுள்ளதையடுத்து அந்த படங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் விருதுகள்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் ஆசியாவின் மிகப்பெரிய வளர்ப்பு யானைகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.  காட்டில் தாயை பிரிந்து வரும் குட்டி யானைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட ஆவணப்படம் தி எலிஃபண்ட் விஸ்பர்ஸ்,  தமிழ்நாட்டின் முதுமலை பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி தம்பதிகளான  பொம்மன், பெள்ளி ஆகியோர் காயமடைந்த யானைகளின் உயிரை காப்பாற்றுவது தொடர்பாக இந்த  தி எலிஃபண்ட் விஸ்பர்ஸ் கதை களம் அமைந்துள்ளது.

Oscars 2023 : ஆஸ்கர் விருது வென்ற பிரபலங்கள் யார்... யார்? - முழு பட்டியல் இதோ

குட்டியானைகளின் நிஜ கதை

தாயை பிரிந்த 2 குட்டியானைகளையும் பராமரிக்கும் பணியில் பொம்மன், பெள்ளி தம்பதியினர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் மிக அன்பாக குட்டி யானைகளை பராமரிக்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் அந்த குட்டியானைகளின் தாய் தந்தையாகவே பொம்மன், பெள்ளி தம்பதியினர் மாறி விட்டனர். இந்த  “தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்” எனும் படத்திற்கு ஆஸ்கர் விருதினை வாங்கியதன் மூலம் உலகம் முழுக்க அந்த படம் கவனம் ஈர்த்து வருகிறது. இதே போல இயக்குனர் ராஜமவுளி இயக்கத்தில் உருவான ஆர்ஆர் ஆர் பாடத்தில் இடம்பெற்றிருந்த நாட்டுக்கூத்து பாடலும் ரசிகர்ககளை வெகுவாக கவர்ந்திருந்தது.

முதலமைச்சர் வாழ்த்து

இந்தநிலையில், இந்த படத்திற்கும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.  95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடலுக்கு விருது கிடைத்துள்ளது. சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் ‘The Elephant Whisperers’ விருது வென்றுள்ளது. இதனையடுத்து இந்த விருதை பெற்ற படங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்,

ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் என்ற பெருமையை பெற்று வரலாறு படைத்துள்ளது 'நாட்டு நாட்டு' பாடல். இந்த மகத்தான சாதனையை படைத்த ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆஸ்கர் வென்றதையடுத்து அந்த படத்தின் இயக்குனருக்கும் முதலமைச்சர் வாழ்த்து கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

ஊட்டிப் பெண் இயக்கத்தில்... தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது - யார் இந்த கார்த்திகி?

Congrats to Kartiki Gonsalves & on winning the .

No better news to wake up to than two women bringing the first ever Oscar for an Indian Production.

The patient making & the moving story of deserve all the praises & accolades it's getting. https://t.co/73WyGgqy3T

— M.K.Stalin (@mkstalin)

 

அதில்,முதுமலை தம்பதி தொடர்பான இந்திய ஆவண குறும்படம் 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆஸ்கர் வென்றதற்கு வாழ்த்து. முதன்முதலில் இரண்டு பெண்கள் இந்தியாவுக்கு ஆஸ்கர் விருது பெற்றுத் தந்ததை விட சிறந்த செய்தி எதுவும் இல்லை. அனைத்து விருதுக்கும் இந்த ஆவணப்படம் தகுதியானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

அகதிகள் முகாம் டூ ஆஸ்கர்... ‘அம்மா நான் ஆஸ்கர் ஜெயிச்சிட்டேன்’னு சொல்லி அரங்கை அதிரவைத்த கே ஹூய் குவான்

click me!