இந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கு செம தீபாவளி... அக்.1 முதலே ஊதியம் உயர்வு...

 
Published : Oct 11, 2017, 05:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
இந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கு செம தீபாவளி... அக்.1 முதலே ஊதியம் உயர்வு...

சுருக்கம்

Chief Minister Edappadi Palanisamy said the recommendation of the 1st to the 7th wage is to be implemented.

7 வது ஊதியக்குழு பரிந்துரையை தமிழக அரசு முழுமையாக ஏற்றுகொண்டுள்ளது. அக்.1 முதல் 7 வது ஊதியக்குழு பரிந்துரை அமலுக்கு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சில நாட்களுக்கு முன்பு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த அறிக்கையை  நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 

இதைதொடர்ந்து 7 வது ஊதியக்குழு பரிந்துரையை தமிழக அரசு முழுமையாக ஏற்றுகொண்டுள்ளது. அக்.1 முதல் 7 வது ஊதியக்குழு பரிந்துரை அமலுக்கு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மேலும், தற்போது ரூ. 6,100 ஆக உள்ள குறைந்த பட்ச ஊதியம் ரூ. 15, 700 ஆக உயர்ந்துள்ளது. 
தற்போது ரூ. 77 ஆயிரமாக உள்ள அதிக பட்ச ஊதியம் ரூ. 2.25 லட்சமாகிறது. 
தமிழக அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. 
வீட்டு வாடகை படியை 2.6% உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
பனிக்கொடை வரம்பு ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7, 850 ஆகவும், அதிகபட்ச ஓய்வூதியம் ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்து 500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 
அதிகபட்ச குடும்ப ஓய்வூதியம் ரூ. 67 ஆயிரத்து 500 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளுக்கு கொத்தாக 9 நாட்கள் விடுமுறை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்டாட்டம்!
மகாத்மா காந்தி மீது வன்மம்.. 100 நாள் வேலை திட்டம் மாற்றத்துக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!