
திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்களை வைத்து லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரையடுத்து, அங்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன பதிவு, ஓட்டுனர் உரிமம் பெறுதல், வாகன உரிமப் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளுக்கு லஞ்சம் பெறுவதாகவும், இடைத் தரகர்களின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அடிக்கடி புகார் வந்த வண்ணம் இருந்தன.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று திடீரென திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு இருந்த இடைத்தரகர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அதில், சசிக்குமார் என்ற இடைத்தரகரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
இதைதொடர்ந்து பிடிபட்டவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.