செஸ் ஒலிம்பியாட் : இந்தியா நடத்துகிறதா...? இல்லை திமுக ஸ்டாலின் நடத்துகிறாரா? தேசிய கொடி இல்லாத டீசர்!

By Dinesh TGFirst Published Jul 16, 2022, 11:52 AM IST
Highlights

சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அருகேயுள்ள மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதையொட்டி டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தேசிய கொடி இல்லை, இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாத் ஆனந்த் இல்லை என விமர்கர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போட்டியை அரசு நடத்துகிறதா இல்லை திமுக ஸ்டாலின் தனி ஒருவனாக நடத்துகிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 

முதன்முறையாக தமிழகத்திலுள்ள செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட் நட்சத்திர விடுதியில் வரும் ஜூலை மாதம் 28-ஆம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 10-ஆம் தேதி வரை சர்வதேச அளவிலாள செஸ் ஒலிம்பயாட் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் ஏறத்தாழ 188 நாடுகளிலிருந்து 2500-க்கும் மேற்பட்ட வீரர்கள் 343 அணிகளாக பங்கேற்க உள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று அணிகள் பங்கேற்கின்றனர்.

போட்டியை சிறப்பாக நடத்திட சுகாதாரம், உணவு மற்றும் தங்கும் வசதி, குடிநீர், போக்குவரத்து, மின்சாரம், போன்ற பல்வேறு துறை சார்ந்த 19 உயரதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு அதிகாரிகள் சிறப்பாக செயல்படுத்திடவும், மேற் பார்வையிடவும் தலைமைச் செயலாளர் இறையன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

போட்டியை பாதுகாப்புடன் நடத்திட தமிழகத்திலுள்ள 4000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த 12ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வுக்குப் பிறகு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் பணிகள் விரைந்து முடித்திட பணிகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. குறித்த தேதியில் போட்டியை தொடங்கி கொடுக்கப்பட்ட தினங்களில் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்திட மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு விளம்பரபடுத்தும் விதமாக ஏஆர் ரஹ்மான் இசையமைத்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். 

 

pic.twitter.com/7LoD3dmSNJ

— CMOTamilNadu (@CMOTamilnadu)

டீசரில் தேசிய கொடி இல்லை, இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாத் ஆனந்த் இல்லை என விமர்கர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போட்டியை அரசு நடத்துகிறதா இல்லை திமுக ஸ்டாலின் தனி ஒருவனாக நடத்துகிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசு நடத்தும் தடுப்பூசி முகாம்களில் மற்றும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில்  பிரதமர் மோடியின் படம் இருந்ததையொட்டி குற்றம்சாட்டிய திமுக அரசு, தற்போது அதேயே செய்துள்ளதாக விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 
 

click me!