மக்களே கவனத்திற்கு!! சூப்பர் செய்தி.. அரசுப்பேருந்துகளில் இனி பார்சல் அனுப்பலாம்.. எப்படி..? எப்போது..?

By Thanalakshmi VFirst Published Jul 16, 2022, 11:50 AM IST
Highlights

அரசுப் பேருந்துகளில் பார்சல்களை அனுப்பும் சேவையை சிறு, பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். பேருந்துகளில் உள்ள சுமை பெட்டியை மாத வாடகை மற்றும் தினசரி வாடகை செலுத்தி உபயோகித்துக் கொள்ள இந்தத் திட்டம் ஆகஸ்டு 3ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இது தொடர்பாக போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு விரைவு போக்குவரத்து கழகமானது தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில் குறுகிய நேரத்தில் பேருந்துகளை இயக்குகிறது. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் விளைவிக்கும் அல்லது உற்பத்தி செய்யும் பிரசித்தி பெற்ற பொருட்களை பிற ஊர்களுக்கு வியாபாரம் செய்திட ஏதுவாக, தற்போது லாரி மற்றும் பார்சல் சர்வீஸ்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.

மேலும் படிக்க:நிரம்பிய மேட்டூர் அணை..16 கண்மதகு வழியாக உபரி நீர் திறப்பு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..

இந்நிலையில் குறைந்த அளவிலான பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக குறைந்த நேரத்தில் விரைவாக அனுப்பிட ஏதுவாக, பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அவர் தம் முகவர்கள் தினசரி பொருட்களை இரு ஊர்களுக்கு இடையே அனுப்பி விடும் வகையில், ஒரு மாதம் முழுவதும் பேருந்துகளில் உள்ள சுமை பெட்டியை மாத வாடகை மற்றும் தினசரி வாடகை செலுத்தி உபயோகித்துக் கொள்ள இந்தத் திட்டம் ஆகஸ்டு 3ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும் படிக்க:என்னை என் கணவருடன் சேர்த்து வையுங்கள்… கரூர் எஸ்பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா!!

பிரசித்தி பெற்ற திருநெல்வேலி அல்வா, ஊத்துக்குளி வெண்ணை, தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் சிறு வாழை, நாகர்கோயில் நேந்திரம் சிப்ஸ் உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களையும் இதன் மூலம் அனுப்பலாம். இதனை, சிறு, பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொது மக்கள் இந்த சேவையினை பயன்படுத்திக்கொள்ளலாம்.இதற்காக, அருகிலுள்ள தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். பொதுமக்கள் திருச்சி, மதுரை, சென்னை மார்க்கத்தில் தங்களது சுமைகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் அனுப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:உங்களை பற்றி உண்மைகளை சொல்லட்டுமா.?? வெளியில தலைகாட்டவே முடியாது.. ஓபிஎஸ்சை ஓங்கி அடித்த ஆர்பி உதயகுமார்.

click me!