அருணகிரிநாதரால் கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றப்பட்டது இந்த சென்னிமலை கோயிலில் தான்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே அமைந்துள்ள பிரச்சித்தி பெற்ற கோயில் தான் சென்னிமலை முருகன் கோயில். அருணகிரிநாதரால் கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றப்பட்டது இந்த சென்னிமலை கோயிலில் தான். இங்கு முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், தயிர் ஆகியவை எவ்வளவு நேரமானாலும் புளிக்காது, இந்த கோயில் அமைந்துள்ள மலை மீது காகங்கள் பறப்பதில்லை என பல்வேறு சிறப்புகளை கொண்டது சென்னிமலை கோயில்.
இந்த கோயில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. முருக பக்தர்களால் பெரிதும் போற்றப்படும் இந்த சென்னிமலை கோயிலை கல்வாரி மலையாக மாற்றுவோம் என்று கிறிஸ்தவ முன்னணி அமைப்பை சேர்ந்த ஒருவர் பேசிய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னிமலையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய கிறிஸ்தவ அமைப்பினர், சென்னிமலையின் பெயரை கல்வாரி மலை அல்லது ஏசுமலை என பெயர் மாற்ற வேண்டும் என்று தெரிவித்ததாக இந்து முன்னணி அமைப்பினர் குற்றம்சாட்டி உள்ளனர். இதற்கு இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் முருக பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், சென்னிமலையை காப்பாற்றுவோம் என்ற முழக்கத்துடன் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
உள்ளூர் பொதுமக்கள், இந்து முன்னணி அமைப்பினர், முருக பக்தர்கள் என பெருந்திரளானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். சென்னிமலை முருகன் கோயிலை பாதுகாப்போம் என்ற முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தால் சென்னிமலை முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது. சம்மந்தப்பட்ட கிறிஸ்தவ அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
நவராத்திரி திருவிழா.! பக்தர்களுக்கு பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்.!
சென்னிமலை பகுதியில் கட்டாய மதமாற்றத்தில் சில கிறிஸ்தவர்கள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது சென்னிமலையின் பெயரை கல்வாரி மலை மாற்ற வேண்டும் என்று கிறிஸ்தவ அமைப்பினர் கூறியதால் இந்த விவகாரம் தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.