இரவு முழுவதும் கன மழை பெய்ததால் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
வானிலை நிலவரம்
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் கன மழை பெய்து வருகிறது. தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்தது. மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருந்தது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்தநிலையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திண்டுக்கல் பகுதியில் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது. இதன் காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். இதே போல கரூர் மாவட்டத்திலும் கன மழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்