தமிழக மீனவர்கள் கைது... இரண்டு நாட்களில் இலங்கை - இந்தியா மீனவர்கள் கூட்டு பேச்சுவார்த்தை- எல்.முருகன் தகவல்

Published : Oct 16, 2023, 07:15 AM IST
தமிழக மீனவர்கள் கைது... இரண்டு நாட்களில் இலங்கை - இந்தியா மீனவர்கள் கூட்டு பேச்சுவார்த்தை- எல்.முருகன் தகவல்

சுருக்கம்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் பா.ஜ.க.வை சேர்ந்தவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார். அவரை அமோக வெற்றி பெற செய்வது நமது கடமை என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.   

உலகிலேயே மிகப்பெரிய கட்சி

புதுச்சேரி மாநிலத்தில் பாஜக தலைவர் மாற்றப்பட்டு  பாஜக புதிய தலைவராக  செல்வகணபதி பொறுப்பேற்றுள்ளார். இதனை தொடர்ந்து புதுவையில் உள்ள தனியார் கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில்  மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமை தாங்கினார். புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமார் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள், ஆதரவு எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசும் போது, 1980-ல் வெறும் 2 எம்பிக்களை கொண்டிருந்த பாஜக, இன்றைக்கு பல கோடி தொண்டர்களையும், உலகில் அதிக உறுப்பினர்களையும் கொண்ட கட்சி தான் பாஜக என பெருமையை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

புதுவை தொகுதியில் பாஜக போட்டி

நம்முடைய ஒரே இலக்கு 2024-ல் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். அதுதான் இன்றைக்கு நம்முடைய முழக்கமாக  இருக்கிறது. நிச்சியமாக 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பிடித்து மீண்டும் நரேந்திர மோடி மிகப்பெரிய வெற்றி பெற இருக்கிறார். அந்த வெற்றியில் நம்முடைய புதுச்சேரியின் நாடாளுமன்ற உறுப்பினரும் இருக்க வேண்டும் என தெரிவித்தார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை சேர்ந்தவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார். அவரை அமோக வெற்றி பெற செய்வது நமது கடமை. பா.ஜ.க.வின் அசுர வளர்ச்சியை கண்ட பிரம்மித்துள்ளதாகவும் தெரிவித்தார். 

இரண்டு நாட்களில் பேச்சு வார்த்தை

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது சம்பவத்தை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவித்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், இராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தேவையற்றது. மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பாக இந்தியா - இலங்கை இருநாட்டு குழுவினர் இரண்டு நாட்களில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக கூறினார். 

இதையும் படியுங்கள்

அதிமுகவும், பாஜகவும் ஒன்னா வந்தாலும், தனியா வந்தாலும் தேர்தலில் வெல்லப்போவது திமுக கூட்டணி தான்- உதயநிதி
 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!