பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும்.. சென்னையில் இரு நாள் நடைபெறும் வேலைநிறுத்தம் - வாடகை வாகன ஓட்டுனர்கள்!

By Ansgar R  |  First Published Oct 15, 2023, 11:14 PM IST

Rental Vehicle Drivers Strike : சென்னை போன்ற பெருநகரங்களில் தற்போது பைக் டாக்ஸிகள் அதிகரித்து வருவதால், வாடகை வாகன ஓட்டுனர்கள் பெரும் அவதிக்கு உள்ளாவதாக கூறி, நாளை மற்றும் நாளை மறுநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் வாடகை வாகன ஓட்டுநர்கள்.


பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஏற்கனவே தமிழகத்தின் பல பகுதிகளில் வாடகை வாகன ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். திருச்சியிலும் நாளை மறுநாள் அக்டோபர் 17ஆம் தேதி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர் வாடகை வாகன ஓட்டுநர்கள். 

இந்த சூழலில் தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் நாளை அக்டோபர் 16ஆம் தேதியும், நாளை மறுநாள் அக்டோபர் 17ஆம் தேதியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் வாடகை வாகன ஓட்டுனர்கள்.

Tap to resize

Latest Videos

அரசு பேருந்துக்குள் கொட்டிய கனமழை.. குடையை பிடித்த பயணிகள்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..

வாடகை வாகன ஓட்டுனர்களின் கோரிக்கைகள்

வாடகை வாகனங்களுக்கு அரசே கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்துள்ளனர் வாடகை வாகன ஓட்டுனர்கள்.

அதேபோல வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் டூவீலர் டாக்ஸிகளை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசின் முன் அவர்கள் வைத்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தமிழகம் முழுவதும் விதிகளை மீறி செயல்படும் சுங்கச்சாவடிகள் அனைத்தையும் உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன் வைத்துள்ளனர்.

மேலும் தமிழக அரசு வாகன செயலி ஒன்றை அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது மட்டும் அல்லாமல் சுமார் 13 கோரிக்கைகளை வலியுறுத்தி வாடகை வாகன ஓட்டுனர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த மக்னா யானை உயிரிழப்பு.. பொதுமக்கள் கவலை

click me!