சென்னை சில்க்ஸ் மிச்சமீதி கட்டடமும் பாலத்தின் மீது இடிந்து விழுந்தது....

 
Published : Jun 20, 2017, 05:11 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
சென்னை சில்க்ஸ் மிச்சமீதி கட்டடமும் பாலத்தின் மீது இடிந்து விழுந்தது....

சுருக்கம்

chennai silks demolished on bridge

தி நகரில் தீவிபத்திற்குள்ளான சென்னை சில்க்ஸ் மிச்ச மீதி கட்டிடம் முழுவதும் இடிந்து விழும்போது உஸ்மான் சாலையிலும், அருகிலுள்ள பாலத்தின் மீதும் கட்டிடம் சரிந்து விழுந்தது.

சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் 7 மாடிகளை கொண்ட தி சென்னை சில்க்ஸ் இயங்கி  வந்த நிலையில் இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை என்ற பெயரில் நகைக் கடை செயல்பட்டு வந்தது. இந்தக் கட்டிடத்தில் மே மாதம் 31 ஆம் தேதி அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 

இதில் 7 மாடியும் முற்றிலும் சேதம் அடைந்து உருக்குலைந்து போனது. இதனால் இந்த கட்டிடத்தை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் கட்டிடம் ஸ்திரமற்று இருப்பதால் இடித்து அப்புறபடுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து இந்த கட்டிடத்தை இடிக்கும் பணி ஜா கட்டர் இயந்திரம் மூலம் நடைபெற்று வந்ததது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜா கட்டர் விழுந்து ஒருவர் பலியானதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை கட்டடத்தை இடிக்கும் பணி மீண்டும் தொடங்கியது. இதில், சென்னை சில்க்ஸ் கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டு இடிக்கப்பட்டது.

கடைசியாக கட்டிடம் முழுவதும் இடிந்து விழும்போது உஸ்மான் சாலையிலும், அருகிலுள்ள பாலத்தின் மீதும் சரிந்து விழுந்தது. இந்த கட்டிட கழிவுகளை அகற்றும் பணி நாளை தொடங்கவிருக்கிறது. 

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!