இடிந்து விழுந்தது சென்னை சில்க்ஸ் கட்டிடம் - தி.நகர் முழுவதும் புகை மூட்டம்!!

 
Published : Jun 17, 2017, 10:23 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
இடிந்து விழுந்தது சென்னை சில்க்ஸ் கட்டிடம் - தி.நகர் முழுவதும் புகை மூட்டம்!!

சுருக்கம்

chennai silks demolished down

சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இன்று இடிக்கும் பணி தொடங்கிய நிலையில் அதன்  முன் பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள தி சென்னை சில்க்ஸ் இயங்கி வந்தது. 7 மாடி கொண்ட இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை என்ற பெயரில் நகைக் கடை செயல்பட்டு வந்தது.

இந்தக் கட்டிடத்தில் மே மாதம் 31 ஆட் தேதி அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதில் 7 மாடியும் முற்றிலும் சேதம் அடைந்து உருக்குலைந்து போயுள்ளது. 

இந்த கட்டிடத்தை இடிக்கும் பணி ஜா கட்டர் இயந்திரம் மூலம் நடைபெற்று வந்ததது. இந்த பணி நடைபெற்றுக்கொண்டிருந்த போது, கடந்த சனிகிழமை அதிக எடை கொண்ட ஜா கட்டர் இயந்திரம் மேலிருந்து கீழே விழுந்தது. 

இதில், படுகாயமடைந்த இயந்திர வாகனத்தின் ஓட்டினர் சரத் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து காரணமாக அந்த கட்டிடத்தை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததது.

இந்நிலையில் இன்று காலை கட்டடத்தை இடிக்கும் பணி மீண்டும் தொடங்கியது.இடித்துக் கொண்டிருந்தபோதே சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் முன்பகுதி முழுவதும் திடீரென இடித்து விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தத பணியாளர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.

நல்ல வேளையாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் கட்டடம் தானாக இடிந்து விழுந்ததால் பெரும் பகுதி வேலை குறைந்துள்ளதாக இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!
அமெரிக்க வரி விதிப்பால் சிக்கலில் தமிழகத்தின் ஏற்றுமதித்துறை.. பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்