
சென்னைப் பெருநகர மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணிச் சலுகைகளை வழங்க வலியுறுத்தி கடந்த 15 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து தீர்வு காண்பதற்காகத் தமிழக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் ராஜ் மோகன் ஆகியோர் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.