பொதுவெளியில் ஆபாசமாக பேசினாலோ அல்லது பாடல்கள் பாடினாலோ 3 மாதம் சிறை தண்டனையோடு அபராதம் விதிகப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாட்டு போட்டா தப்பா.?
சமூகவலைதளத்தின் வளர்ச்சியின் காரணமாக உள்ளங்கையில் உலகமானது தற்போது உள்ளது. இதனையடுத்து கையில் மொபைல் போன் மூலம் யாரை வேண்டும் என்றாலும் எப்படியும் திட்டலாம், கேலி செய்து பாடலாம் என்ற நிலையானது தற்போது அதிகரித்து வருகிறது. இது மட்டுமில்லாமல் தவறான வீடியோக்களை சித்தரித்து வெளியிடுவதும் அதிகரித்துள்ளது. இதனிடையே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து சென்னை காவல்துறை சார்பாக எச்சரிக்கை பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுவெளியில் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டியது நம் பொறுப்பு மட்டுமல்ல கடமையும் கூட. நீங்கள் சாதாரணமாக நினைக்கும் செயல்களும் கூட தண்டனைக்குரியவையாக இருக்கலாம். pic.twitter.com/UcnWz1pTg0
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_)
undefined
எச்சரிக்கை விடுத்த போலீஸ்
அந்த பதிவில், பாட்டு போட்டா தப்பா.? என்ற தலைப்பில் பொதுவெளியில் அருவருக்கதக்க வகையில் பேசுவது, பாடல்கள் பாடுவது ஒலிக்கச்செய்வது, தகாத வார்த்தைகள் பேசுவது மற்றும் ஒழுங்கீனமான எந்த ஒரு நடவடிக்கையும் தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு 3 மாதம் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அல்லது இரண்டை தண்டனையும் சேர்ந்து விதிக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுவெளியில் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டியது நம் பொறுப்பு மட்டுமல்ல கடமையும் கூட. நீங்கள் சாதாரணமாக நினைக்கும் செயல்களும் கூட தண்டனைக்குரியவையாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்