வானிலை ஆய்வு துறையின் கட்டமைப்பு உலக தரம் வாய்ந்தது.! விமர்சனத்தால் பணியாளர்கள் வேதனை - சென்னை வானிலை மையம்

By Ajmal KhanFirst Published Dec 24, 2023, 6:24 AM IST
Highlights

ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு பதிலாக, சென்னைவானிலை மையத்தை இலக்காக வைத்து செய்யப்படும் விமர்சனங்கள், அர்ப்பணிப்புடன் இயங்கும் தமிழக வானிலை மைய பணியாளர்களை புண்படுத்தும் விதமாகவும். நமது இந்திய தொழில்நுட்பத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கன மழை

தமிழகத்தில் தென் மற்றும் வட மாவடங்களில் புரட்டி போட்ட மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு அடைந்தனர். வரலாறு காணாத மழை பெய்த நிலையில், வானிலை மையம் சார்பாக உரிய அறிவிப்பு கொடுக்கவில்லையென பரவலாக விமர்சிக்கப்பட்டு வந்தது. இதனிடையே தமிழக அரசும் இந்த குற்றச்சாட்டை தெரிவித்தது. மேலும் பாமக தலைவர் அன்புமணியும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.  இந்தநிலையில், இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சமீபமாக, சென்னை வானிலை மையம் நவீனமாக இல்லாமல் இருப்பதாக தவறான விமர்சனங்கள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது.

வானிலை மையம் அறிக்கை

இந்திய வானிலை துறையில் பயன்பாட்டில் இருக்கும் அதிவேக கணினிகள், இஸ்ரோவின் செயற்கைகோள் வசதிகள், ரேடார்கள் மற்றும் தானியங்கி வானிலை சேகரிப்பன்கள் உலகத்தரத்திற்கு ஒப்பானவை. சென்னை மண்டல வானிலை மையத்திலும் இத்தகைய கருவிகளே பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக. சென்னை வானிலையை கண்காணிக்க இரண்டு டாப்ளர் ரேடார்களும், தென் தமிழகத்தை கண்காணிக்க மூன்று டாப்ளர் ரேடார்களும் பயன்பாட்டில் உள்ளன. இதில் X band வகை ரேடார் இஸ்ரோ தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டதாகும். இந்தியாவில் சிறந்த ரேடார் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னை வானிலை மையத்தில் பணியாற்றுகிறார்கள்.

தவறான விமர்சனங்களை தவிருங்கள்

உலக வானிலை அமைப்பு இந்திய வானிலை ஆய்வு துறையின் கட்டமைப்பு மற்றும் முன்னெச்செரிக்கைகளை உலக தரம் வாய்ந்தது என்று பாராட்டியுள்ளது. வர்தா, கஜா, நிவர், மாண்டோஸ் மற்றும் மிக்ஜாம் புயல்கள் குறித்து வானிலை மையத்தின் எச்சரிக்கைகள் காரணமாக பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு பதிலாக, சென்னைவானிலை மையத்தை இலக்காக வைத்து செய்யப்படும் விமர்சனங்கள், அர்ப்பணிப்புடன் இயங்கும் தமிழக வானிலை மைய பணியாளர்களை புண்படுத்தும் விதமாகவும். நமது இந்திய தொழில்நுட்பத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் உள்ளது. அத்தகைய தவறான விமர்சனங்களை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதையும் படியுங்கள்

கட்டணமின்றி பள்ளி சான்றிதழ் நகல்களை பெறலாம்.. மாணவ, மாணவிகளுக்கு குட் நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வித்துறை

click me!