தமிழக முன்னாள் தலைமை செயலாளர் எம்.எம்.ராஜேந்திரன் மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

By Raghupati R  |  First Published Dec 23, 2023, 11:52 PM IST

தமிழக முன்னாள் தலைமை செயலாளர் எம்.எம். ராஜேந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும் ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான திரு.எம்.எம். ராஜேந்திரன் அவர்கள் மறைவெய்தினார் என்று அறிந்து மிகவும் வருந்துகிறேன். 1957 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான திரு. ராஜேந்திரன் அவர்கள் உதவி ஆட்சியர், துணை ஆட்சியர் போன்ற பொறுப்புகளை வகித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக உயர்ந்தவர். 

அந்தச் சமயத்தில் 1964-ஆம் ஆண்டு தனுஷ்கோடியில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டவர். அந்த அனுபவத்தைக் கொண்டு பின்னாளில் 1999-ஆம் ஆண்டு ஒடிசா மாநில ஆளுநராக இருந்தபோது அங்கு நிகழ்ந்த புயலை எதிர்கொள்வதிலும் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி முக்கியப் பங்களிப்பை ஆற்றியுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தபோது தலைமைச் செயலாளரான திரு. ராஜேந்திரன் அவர்கள் 1989-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சரான பின்னும் அப்பதவியில் தொடர்ந்து நீடித்துப் பணியாற்றினார். அரசு நிர்வாகத்திலும், அரசியலமைப்புப் பதவிகளிலும் சிறப்பாகவும் நிர்வாகத் திறனோடும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட்டவர்
திரு. ராஜேந்திரன் அவர்கள்.

அவரை இழந்து தவிக்கும் அவரது துணைவியாருக்கும், உறவினர்களுக்கும், அவருடன் பணியாற்றிய இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. ஓலா ஸ்கூட்டரின் தாறுமாறான அம்சங்கள்..

click me!