
மிக்ஜாம் புயலால் டிசம்பர் 3, 4 பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனை தொடர்ந்து டிசம்பர் 17, 18ஆம் தேதி பெய்த கனமழையால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அடுத்தடுத்த கோர சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். நிவாரணப் பொருட்களை பல்வேறு தரப்பினரும் மக்களுக்கு கொடுத்து உதவி வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கனமழையால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு கேரள மாநில சகோதர, சகோதரிகள் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்ததற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், “கேரள உடன்பிறப்புகளின் அன்புக்கு நன்றி” என்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. ஓலா ஸ்கூட்டரின் தாறுமாறான அம்சங்கள்..