சென்னையில் Formula Racing Circuit.. டிசம்பரில் நடக்கவுள்ள நிகழ்வு - அரசு சார்பில் 15 கோடி நிதி வழங்கிய உதயநிதி

By Ansgar R  |  First Published Oct 13, 2023, 8:46 PM IST

சில தினங்களுக்கு முன்பு சீனாவில் நடைபெற்ற 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, 17 தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில், 28 பதக்கங்களை குவித்து வந்த தமிழ்நாட்டு வீரர் - வீராங்கனையர் 20 பேருக்கு மாண்புமிகு தகா முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மொத்தம் ரூ.9.40 கோடி அளவிலான ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்தினார்.


நேற்று சென்னையில் நடந்த பிரம்மாண்ட நிகழ்வில், ஆசிய போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகைகளை வழங்கிய சிறப்பித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள். இந்த நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சென்னையில் நடக்கவுள்ள ஒரு புதிய நிகழ்வு குறித்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். அவர் வெளியிட்ட பதிவில் "விளையாட்டு போட்டிகளின் மூலம் சர்வதேச நாடுகளின் கவனத்தை தமிழ்நாட்டின் பக்கம் ஈர்த்து வரும் நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முக்கிய முயற்சியாக சென்னையில் Chennai Formula Racing Circuit - F4 On Street Night Race நடைபெறவுள்ளது" என்று கூறியுள்ளார்.

Tap to resize

Latest Videos

LA 2028: 128 ஆண்டுகளுக்குப் பிறகு 2028 ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

மேலும் "வரும் டிசம்பர் மாதம் கோலாகலமாக நடத்தப்படவுள்ள இந்த நிகழ்விற்காக அரசின் சார்பில் முதற்கட்ட நிதியாக ரூ.15 கோடிக்கான காசோலையை போட்டி அமைப்பாளர்களிடம் வழங்கினோம்" என்றும் தெரிவித்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சுமார் 3.5 கிமீ நீளமுள்ள சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்,19 திருப்பங்களை கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள நீளமான ரேசிங் சர்க்யூட் இதுவென்று கூறப்படுகிறது. வருகின்ற டிசம்பர் 9ம் தேதி மற்றும் 10ம் தேதி இங்கு போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

IND vs PAK: சுப்மன் கில் விளையாடுவது 99 சதவிகிதம் உறுதி, ஒரு சதவிகிதம் வாய்ப்பில்லை - ரோகித் சர்மா!

click me!