சென்னை மாநகராட்சியில் ரூ.945 கோடி வரி வசூல்; கடந்த ஆண்டை விட 345 கோடி கூடுதல் வசூல்

By Dinesh TGFirst Published Oct 2, 2022, 10:03 AM IST
Highlights

சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டும் ரூ.945 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த நிதியாண்டின் அரையாண்டில் வசூலிக்கப்பட்டதைக் காட்டிலும் தற்போது 345 கோடி ரூபாய் கூடுதலாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் மொத்தமாக 15 மண்டலங்களுக்கு உட்பட்டு 200 வார்டுகள் உள்ளன. வார்டுகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டுள்ள வீடுகள், நிலங்களுக்கு சொத்து வரியும், வணிகம் சார்ந்த கட்டிடங்களுக்கு தொழில் வரியும் வசூலிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி அண்மை காலமாக வரி வசூல் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.

காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய ஆர்.என்.ரவி, மு.க.ஸ்டாலின்...! தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த ஆளுநர்

இந்நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு ஆக்ஸ்ட் 30ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த முதல் அரையாண்டில் மட்டும் 945 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. கடந்த 2021 - 2022ம் நிதியாண்டில் மொத்தமாக 1240 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டு இருந்தது. குறிப்பாக கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் வசூலிக்கப்பட்டதைக் காட்டிலும் தற்போது 345 கோடி ரூபாய் கூடுதலாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை அழகர் கோவிலில் தீ விபத்து.! புரட்டாசி சனிக்கிழமையில் துயர சம்பவம் - பரபரப்பு சம்பவம் !

மேலும் மொத்தமாக இந்த நிதியாண்டு முழுமைக்கும் சென்னை மாநகராட்சியில் மட்டும் ரூ.1700 கோடி ரூபாய் வரி வசூல் இருக்கும் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

click me!