பொது இடங்களில் குப்பை கொட்டிய, சுவரொட்டி ஒட்டியவர்களுக்கு அபராதம்... சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!!

By Narendran S  |  First Published Sep 5, 2022, 8:48 PM IST

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களுக்கும், சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் ரூ.15,63,030 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களுக்கும், சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் ரூ.15,63,030 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன் படி பொது மற்றும் தனியார் இடங்களில்  குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்பினால் கணக்கு முடக்கப்படும்... குழு அமைத்தது காவல்துறை!!

Tap to resize

Latest Videos

மேலும், சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அவ்விடங்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: அரசு பேருந்துகளில் கட்டண சலுகை.. வெளியான அதிரடி அறிவிப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி!

வ. எண் மண்டலங்கள் குப்பைகள் கொட்டியவர்களுக்கான அபராதம் குப்பைகள் கொட்டியவர்களுக்கான அபராதம் சுவரொட்டிகள் ஒட்டியவர்களுக்கான அபராதம்
1 திருவொற்றியூர் ரூ.26,200     ரூ.53,000 ரூ.3,500 
2 மணலி ரூ.14,500      ரூ.10,500 ரூ.4,000   
3 மாதவரம் ரூ.47,500     ரூ.20,000 ரூ.7,000   
4 தண்டையார்பேட்டை ரூ.42,000     ரூ.39,810 ரூ.7,000   
5 இராயபுரம் ரூ.45,500     ரூ.37,000 ரூ.5,000   
6 திரு.வி.க.நகர் ரூ.41,000     ரூ.15,000 ரூ.7,300   
7 அம்பத்தூர் ரூ.54,000     ரூ.54,000 ரூ.6,900   
8 அண்ணாநகர்   ரூ.1,00,800     ரூ.60,000 ரூ.5,000   
9 தேனாம்பேட்டை ரூ.89,520     ரூ.49,000 ரூ.5,000   
10 கோடம்பாக்கம் ரூ.54,500     ரூ.75,000 ரூ.7,500   
11 வளசரவாக்கம் ரூ.45,300     ரூ.47,000   ரூ.9,000   
13 ஆலந்தூர் ரூ.40,700     ரூ.46,000 ரூ.5,000   
14 அடையாறு ரூ.32,000     ரூ.43,000 ரூ.5,000   
15 பெருங்குடி ரூ.91,500     ரூ.32,000 ரூ.10,500   
16 சோழிங்கநல்லூர்  ரூ.1,14,500     ரூ.44,500 ரூ.10,000   
  மொத்தம் ரூ.8,39,520     ரூ.6,25,810 ரூ.97,700   

 

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 18.08.2022 முதல் 02.09.2022 வரை பொது இடங்களில் குப்பை கொட்டிய  நபர்களுக்கு ரூ.8,39,520 அபராதமும்,  கட்டுமானக் கழிவுகளை கொட்டிய  நபர்களுக்கு ரூ.6,25,810 அபராதமும், அரசு, மாநகராட்சி கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய 211 நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு  ரூ.97,700 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுதல், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் ஆகியவற்றை தவிர்த்து சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

click me!