சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்பினால் கணக்கு முடக்கப்படும்... குழு அமைத்தது காவல்துறை!!

By Narendran S  |  First Published Sep 5, 2022, 6:51 PM IST

சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பும் நபர்களை கண்டுபிடித்து உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறையில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. 


சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பும் நபர்களை கண்டுபிடித்து உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறையில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யூடியூபில், டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பொய்யானத் தகவல்களை பதிவு செய்து, வதந்திகளை பரப்பி அதன்மூலம் குழப்பங்களையும், சண்டைகளையும், கலவரங்களையும், காவல் துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும் நபர்களைக் கூர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அண்ணா நூலகத்தை ஸ்டாலினுடன் சுற்றிப்பார்த்த கெஜ்ரிவால்..! அசந்து போய் என்ன சொன்னார் தெரியுமா..?

Tap to resize

Latest Videos

அதுபோல இணைய வழியில் பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் விற்பனை, பண மோசடி போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டுபிடிக்கவும் தேவை ஏற்பட்டுள்ளது. அதற்காக சென்னை உட்பட 9 மாநகரங்களிலும், 37 மாவட்டங்களிலும் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட சமூக ஊடகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கணினிசார் திறன் சைபர் தடய அறிவியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் தெரிவு செய்யப்பட்டு, இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: ஆதரவாளர்களை சந்திக்கும் மு.க அழகிரி...! மீண்டும் அரசியல் பிரவேசமா..? பதில் என்ன..?

இக்குழு சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் பொய்யான பதிவுகளை சமூக ஊடகங்களில் பரப்பும் விஷமிகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்து அந்த வதந்தி பதிவுகளை நீக்கவும், அவர்களின் சமூக ஊடகக் கணக்குளை முடக்கவும், கணினிசார் குற்ற வழக்குகளை பதிவு செய்வதற்கும் இக்குழு துரிதமாக செயல்படும். இந்த நடவடிக்கையின் மூலம் சாதி, மத, அரசியல் மோதல்களைத் தடுத்திடவும் இக்குழு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!