ஊதியம் வழங்காததால் அதிகாலையிலேயே பேருந்து ஓட்டுநர்கள் ஸ்ட்ரைக் …. நொந்து நூலான பயணிகள் !!

By Selvanayagam PFirst Published Jul 1, 2019, 8:24 AM IST
Highlights

ஜுன் மாதத்துக்குரிய சம்பளம் வழங்காததைக் கண்டித்து சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுப்ட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.இதனால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் ஓடவில்லை. 
 

தமிழகத்தைப் பொறுத்தவரை போக்குவரத்துறை என்பது ஒர சென்சிட்டிவான துறையாகவே இருந்து வருகிறது. ஓய்வூதியம், பணிக்கொடை என தொடர்ந்து ஏற்பட்டு வரும் தொழிலாளர் பிரச்சனைகளால், அடிக்கடி ஸ்ட்ரைக் நடைபெற்று வருகிறது. இதனால் பயணிகள் அடிக்கடி அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வழங்க வேண்டிய ஜூன் மாதம்  சம்பளம் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் இன்றைக்குள் சம்பளம் வழங்கப்படும் என்றும் ஆனால்  60 சதவீதம் மட்டுமே வழங்கப்படும் என வதநதி பரவியதால் போக்குவரத்து பணியாளர்கள் ஆத்திரமடைந்தனர்.

இதையடுத்து  முழு ஊதியம் வேண்டிய  அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி மனையில் இருந்து பேருந்துகளை இயக்க ஓட்டுநர்கள் மறுத்ததால், குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன.

வடபழனி, அண்ணாநகர், அம்பத்தூரில் மாநகர பேருந்துகளை பணிமனையில் இருந்து இயக்காமல் நடத்துனர்களும் , ஓட்டுநர்களும் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தால் பேருந்துகள் ஓடவில்லை. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஓட்டுநர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் இன்று மாலைக்குள் வழங்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உறுதி அளித்துள்ளது. ஆனாலும் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிமனைகளில் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

click me!