சென்னை.. மது போதையில் ஏற்பட்ட தகராறு.. தடுக்க வந்த போலீசாரை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள் - வைரலாகும் வீடியோ!

By Ansgar R  |  First Published Oct 26, 2023, 11:30 PM IST

சென்னை அம்பத்தூர் பகுதியில் வட மாநில இளைஞர்கள் பலர் இணைந்து போலீசாரை தாக்கிய வீடியோ தற்பொழுது இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சென்னை அம்பத்தூர் தொழில் பேட்டையில் உள்ள பட்டரவாக்கம் பகுதியில் தற்போது செயல்பட்டு வருகிறது ஒரு தனியார் நிறுவனம், அங்கு ஆயுத பூஜை கொண்டாடப்பட்ட நிலையில் அந்த நிறுவனத்தில் வேலை செய்து வருகின்ற 150க்கும் அதிகமான வட மாநில இளைஞர்கள் அதில் கலந்து கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. 

அதன் பிறகு மது அருந்திய அந்த வட மாநில இளைஞர்கள் ஒரு கட்டத்தில் இரு பிரிவுகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி போலீசார் சிலர், அங்கு சண்டையில் ஈடுபட்டு வந்த வடமாநில இளைஞர்களை கட்டுப்படுத்த முயன்றுள்ளனர். 

Tap to resize

Latest Videos

அக்டோபர் 31ஆம் தேதி கூடும் தமிழக அமைச்சரவை கூட்டம்!

ஆனால் அப்போது ஒன்று கூடிய அந்த வட மாநிலத்து இளைஞர்கள், காவல்துறை அதிகாரிகளை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் தலைமை காவலர் ரகுபதி அவர்களும் காவலர்கள் கிரி மற்றும் ராஜ்குமார் ஆகிய மூன்று பேரும் பலத்த காயமடைந்து தற்போது ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அங்கே அவருடைய காயங்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது, மது போதையில் இருந்த வட மாநில தொழிலாளர்கள் பலர் போலீசாரை ஈவு இரக்கமின்றி சரமாரியாக தாக்கிய இந்த சம்பவத்தின் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. போலீசார் இந்த தாக்குதல் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!