
சென்னை விமான நிலையத்தில் 450 கிராம் தங்கம் மற்றும் 2,000 பொட்டலங்கள் குட்கா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமானநிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் துபாயில் இருந்து வந்த சிலர் 450 கிராம் மற்றும் 2000 பொட்டலங்கள் குட்கா இருப்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடமிருந்து தங்கத்தையும், குட்கா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.