தியேட்டர்களை இழுத்து மூடும் உரிமையாளர்கள் - மீண்டும் வேலை நிறுத்தம் செய்ய முடிவு...!

First Published Sep 30, 2017, 6:57 PM IST
Highlights
Producer Association and Theater Owners Association have opposed the entertainment fate.


கேளிக்கைவரி விதிப்புக்கு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேளிக்கை வரியை எதிர்த்து திரையரங்குகளை மூட முடிவு என்று திரையரங்கு உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. 

டிக்கெட் விலையோடு சேர்த்து 18% ஜிஎஸ்டி வரியும் கேளிக்கை வரியும் சேர்ந்ததால் டிக்கட்கள் விலை மிகவும் உயர்ந்தது. 
இதனால் பொதுமக்கள் திரையரங்கிற்கு வருவது குறையும் எனவும், கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும், தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தினர். 

மேலும் இதை கண்டித்து திரையரங்க உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கமும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் தமிழக அரசிடம் கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரிக்கை வைத்து திரையரங்குகளை திறந்தனர். 

இந்நிலையில், தமிழகத்தில் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி கடந்த 27 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. புதிய திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி 30% சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. பிற மொழி படங்களுக்கு 20 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் கேளிக்கைவரி விதிப்புக்கு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேளிக்கை வரியை எதிர்த்து திரையரங்குகளை மூட முடிவு என்று திரையரங்கு உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. 
 

click me!