
சென்னை யானைக்கவுனியில் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சென்னை யானைக்கவுனியில் சிலர் வெளிநாட்டு சிகரெட்டுகள் விற்பனை செய்து வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸ் திடீரென அப்பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த பகுதியில் உள்ள கடைகளில் வெளிநாட்டு சிகரெட்டுகள் விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து கடை உரிமையாளகளை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
பின்னர், தனிப்படை போலீசார் அங்கிருந்த ரூ. 60 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.