சென்னையில் இடி… கன மழை நள்ளிரவு முதல் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை !!

By Selvanayagam PFirst Published Nov 15, 2018, 8:05 AM IST
Highlights

கஜா' புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.. 

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. கடந்த 3 நாட்களாக கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த ‘கஜா’ புயல் இன்று  நிலப்பகுதியை நோக்கி வருகிறது.

தமிழகத்தில் கடலூர்-பாம்பன் இடையே இன்று மாலை முதல் கரையை கடக்க இருக்கிறது என்றும், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரையில் 15-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை அதன் சுற்றுவட்டார பகுதிகளான கோயம்பேடு, கிண்டி ,ஈக்காட்டு தாங்கல், வடபழனி,, வளசரவாக்கம்,போரூர், வண்டலூர், அம்பத்தூர், குன்றத்தூர் , மாங்காடு, காட்டுப்பாக்கம், ஆவடி, ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.

நள்ளிரவில் தொடங்கிய மழை தொடாந்து ஆங்காங்கே பெய்து வருகிறது.

click me!