பிளஸ் 1 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் எப்போது பெறலாம்..? அரசு தேர்வு இயக்ககம் அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published Jun 27, 2022, 4:45 PM IST
Highlights

ஜூலை 1ம் தேதி முதல் 11ம் வகுப்பு மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும்  விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
 

ஜூலை 1ம் தேதி முதல் 11ம் வகுப்பு மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும்  விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க:TN 11th Result 2022:பிளஸ் 1 பொதுத்தேர்வில் 90.01% பேர் தேர்ச்சி..முதலிடத்தை தட்டி தூக்கிய பெரம்பலூர் மாவட்டம்

மாநில பாடத்திட்டத்தின் கீழ் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வினை தமிழகம் முழுவதும் 8.3 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்தாண்டில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க:பிளஸ் 1 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு.. தேர்வு எப்போது..? முழு தகவல்..

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் 84.66% பேரும் மாணவிகளில் 94.99% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 % அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 96.04% ஆக இருந்த நிலையில் இந்தாண்டு 5.97% ஆக குறைந்துள்ளது. இந்தாண்டு 11 ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் 95.56 % மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

மேலும் படிக்க:ஜூலை 18ல் கல்லூரிகள் திறப்பு.. முதலாமாண்டு பொறியியல் வகுப்பு எப்போது..? அமைச்சர் அறிவிப்பு..

இந்நிலையில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 துணைத்தேர்வுக்கு ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் நடைபெறும் உடனடி தேர்வுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது அரசு தேர்வுகள் சேவை மையங்களிலோ அல்லது அந்தந்த பள்ளிகளிலோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூலை 1ம் தேதி முதல் 11ம் வகுப்பு மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும்  விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

click me!