நிலத்தடி நீர் எடுக்க ரூ.10,000 கட்டணமா? தமிழக அரசு கொடுத்த பரபரப்பு விளக்கம்

By vinoth kumar  |  First Published Jul 7, 2022, 3:10 PM IST

நிலத்தடி நீர் எடுக்க ரூ.10,000 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. 


நிலத்தடி நீர் எடுக்க ரூ.10,000 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. 

மத்திய நிலத்தடிநீர் ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம், நீச்சல் குளம், சுரங்கத் திட்டங்கள், உட்கட்டமைப்பு, தொழிற்சாலைகள், தண்ணீர் விநியோகிப்பாளர்கள், குடியிருப்பாளர் நலச் சங்கங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் உட்பட அனைத்து நிலத்தடி நீர் பயன்பாட்டாளர்களும் நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையில்லாச் சான்றிதழை ஜூன் 30ம் தேதிக்குள் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம் பெற வேண்டும். அதற்கான விண்ணப்பம் அளிக்கும்போது ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அட கடவுளே... 9 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை.. அதிர வைக்கும் காரணம்..!

ஒருவேளை, மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம் தடையில்லா சான்று பெறாமல் தொடர்ந்து நிலத்தடி நீர் எடுக்கும் பயன்பாட்டாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால், தனி வீடு வைத்திருப்போர், குடியிருப்புதாரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த அறிவிப்பானது தமிழகத்திற்கு பொருந்தாது என தமிழக பாஜகவினர் விளக்கம் அளித்த நிலையிலும், இது தொடர்பான குழப்பம் தொடர்ந்து நிலவிவந்தது.

இதையும் படிங்க;- செந்தில் பாலாஜி கையில் 40 எம்.எல்.ஏக்கள்.. மகாராஷ்டிராவை போல் தமிழகத்தில் அது நடக்கும்? அலறவிடும் பிரமுகர்.!

இந்நிலையில், மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்ட இந்த அறிவிப்பானது தமிழகத்திற்கு பொருந்தாது என தமிழக நீர்வளத்துறை விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- நிலத்தடி நீர் எடுக்க ரூ.10,000 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது. மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 20 மாநிலங்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பானது பொருந்தும் என மத்திய நிலத்தடி நீர் ஆணையம் தன்னுடைய இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க;-  மெட்ரோ ரயிலில் செல்பவர்களா நீங்கள்? அப்படினா இன்று முதல் இது கட்டாயம்..!

click me!