ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்குவது உறுதி... சூசகமாக தெரிவித்த மத்திய அரசு - கொந்தளிப்பில் மக்கள்

 
Published : Mar 27, 2017, 01:30 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்குவது உறுதி... சூசகமாக தெரிவித்த மத்திய அரசு - கொந்தளிப்பில் மக்கள்

சுருக்கம்

central government decided to start hydro carbon project

நெடுவாசல் கிராம மக்களின் சந்தேகங்களை தீர்த்த பின்னரே ஹைட்ரோ கார்பன் திட்டப் பணிகள் தொடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நெடுவாசல் கிராம மக்கள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமசரம் பேசினர்.

மேலும், போராட்ட குழுவினர், டெல்லியில் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை, சந்தித்து பேசினர். இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில், இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டங்கள் குறித்த ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாக உள்ளன.

இதற்கிடையே நெடுவாசல் கிராம மக்களின் சந்தேகங்களை தீர்த்த பின்னரே ஹைட்ரோ கார்பன் திட்டப் பணிகள் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. க்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களை தமிழக அரசு போக்கும் என்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஜெம் லேபாரட்டரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏராளமானோருக்கு வேலை கிடைக்கும் என்றும் மாநில அரசின் ஒப்புதல், மக்கள் கருத்து கேட்டறிவது உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்த பின் திட்டம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Govt Business Training: நீங்களும் ஆகலாம் தொழிலதிபர்.! சென்னையில் 5 நாள் பயிற்சி.! A to Z கத்துக்கலாம் வாங்க.!
வாட்டி வதைக்கும் கடும் குளிர்.. மழை அவ்வளவு தானா? டெல்டா வெதர்மேன் சொல்வது என்ன?