
நாடு முழுவதும் கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏடிஎம் மையங்களில், பணம் இருக்கும் மெஷினை கடப்பாரையால் உடைத்து, நெம்பி கொள்ளையடிக்கும் முயற்சி பல இடங்களில் நடந்துள்ளன.
ஏடிஎம் மையங்களில் கண்காணிப்பு கேமரா வைத்து இருந்தாலும், அதையும் மர்மநபர்கள், உடைத்து கொண்டு சென்று விடுகின்றனர்.
இதுபோல், ஏடிஎம் மையங்களுக்கு காவலாளிகளை வேலைக்கு நியமித்தும், கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், கரும்பு சாப்பிடுவதற்கு கூலி தருவது என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல், சேதம் அடைந்த ஏடிஎம் மெஷினில், பசை போட்டு ஒட்ட வைத்துள்ளனர், இந்தியன் வங்கி நிர்வாகத்தினர்.
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே இந்தியன் வங்கி ஏடிஎம் மையம் செயல்படுகிறது. இங்குள்ள ஏடிஎம் மெஷின் உடைந்து சேதமாகியுள்ளது. இதனை சீரமைக்காமல், பாகங்களுக்கு ஒட்டு போட்டு, பசை தடவி வைத்துள்ளனர்.
இந்தியன் வங்கியில் பணமே இல்லாததுபோல், இந்த ஏடிஎம் மெஷினை சீரமைக்காமல் உள்ளனர். இந்த மெஷினை சரி செய்ய வேண்டுமானால், விவசாயிகளின் கடனை பெற்ற பின்னரே, இந்த மெஷினை சரி செய்யும் ஐடியாவில் இருப்பார்களோ என தோன்றுகிறது.
கொள்ளைகாரனுக்கு கொள்ளையடிக்க இந்தியன் வங்கி நிர்வாகமே இதுபோன்று வழிகொடுத்து வழிவகுக்கிறது...