எதிர்ப்பை மீறி இன்று கையெழுத்தாகிறது ஹைட்ரோ கார்பன் திட்டம்..!!

 
Published : Mar 27, 2017, 10:16 AM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
எதிர்ப்பை மீறி இன்று கையெழுத்தாகிறது ஹைட்ரோ கார்பன் திட்டம்..!!

சுருக்கம்

hydro carbon project signing today

இந்தியா முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது.

இதற்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடும் எதிர்ப்பு எழுந்தது. பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்த்ல் ஈடுபட்டவர்களிடம் சமசரம் பேசினர். மேலும், போராட்ட குழுவினர், டெல்லியில் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை, சந்தித்து பேசினர். இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில், இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டங்கள் குறித்த ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாக உள்ளது.

டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இத்திட்டத்தில் ஒப்பந்தம் எடுத்துள்ள 22 நிறுவனங்கள் புரிந்துணர்வு பத்திரத்தில் கையெழுத்திடுக்கின்றன. இந்த ஒப்பந்தங்கள் மூலம் 62 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைக்கும், சுமார் 37 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

SIR படிவங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்..!
இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி