செல்போன் சேவை முடங்கியதால் பதற்றம்….உறவினர்கள், நண்பர்கள் கதி குறித்து அறிய முடியாமல் தவிப்பு….

First Published Dec 13, 2016, 1:30 PM IST
Highlights


செல்போன் சேவை முடங்கியதால் பதற்றம்….உறவினர்கள், நண்பர்கள் கதி குறித்து அறிய முடியாமல் தவிப்பு….

வர்தா புயல் மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில்  செல்போன் சேவைகள் முடங்கின.பலத்த சூறைக்காற்று வீசியதால்  செல்போன் டவர்கள் சரிந்து விழுந்தன. இதனால் அனைத்து செல்போன சேவைகளும் துண்டிக்கப்பட்டன. நேற்று காலை 10 மணிக்கு மேல் எந்த நம்பரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.செல்போன் சேவை துண்டிக்கப்பட்டதால் உறவினர்கள், நண்பர்கள் கதி என்ன என்று தெரியாமல் பொது மக்கள் மிகுந்த அவதியுற்றனர்.

வர்தா புயல் சென்னையை நேற்று உருக்குலைத்து சென்ற பிறகு மீட்புப் பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. காற்றில் சாய்ந்து விழுந்த மரங்களை அகற்றும் பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் துரித கதியில் செய்து வருகின்றனர். இன்று மாலைக்குள் மாநகரம் முழுவதும் மின்விநியோகம் சீர் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வர்தா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும்,நிவாரணப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்கள் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

click me!