பீதியை கிளப்பிய வர்தா புயலைத் தொடர்ந்து கன மழை எச்சரிக்கை…

First Published Dec 13, 2016, 11:04 AM IST
Highlights


பீதியை கிளப்பிய வர்தா புயலைத் தொடர்ந்து கன மழை எச்சரிக்கை…


தென் கிழக்கு வங்க கடலில் உருவான அதி தீவிர வர்தா புயல் சென்னை துறைமுகம் அருகே கரையை கடந்தது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வரை இருந்தது. மையப்பகுதி புயல் நேற்று பிற்பகலில் பகல் 2.45 மணி முதல் மாலை 5 மணி வரை கடந்தது. புயல் கரையை கடக்கும்போது வலுவாகவே கடந்துள்ளது. கரையை  கடந்த பின்னர் அது மேற்கு நோக்கி திருவண்ணாமலை மாவட்டம் நோக்கி சென்றது. தற்போது வர்தா புயல் கர்நாடக மாநிலம் பெங்களுரை நெருங்கியுள்ளது.

சென்னையைப் பொறுத்த வரை புயல் கரையை கடந்த பின் வலுவிழந்ததால் காற்றின் வேகம் மணிக்கு 75 முதல் 85 கிலோ மீட்டர் வரை இருந்தது.

இந்நிலையில் புயல் கரையை கடந்தாலும் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் கனமழை பெய்யும் என்றும்  ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும். என்றும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு.பாலசந்திரன், படிப்படியாக மழையின் அளவு குறையும் என்றும் தெரிவித்தார்.

வர்தா புயலைப் போன்றே கடந்த 1941-ம் ஆண்டு டிசம்பர்  மாதம் சென்னையை அதிதீவிர புயல் தாக்கி உள்ளது. 75 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது வர்தா புயல் தாக்கி உள்ளது.
 

click me!