சென்னையில் மின்சார ரயில் சேவை தொடங்குவதில் தாமதம்…மின்சாரம் கிடைத்த பின்னரே இயக்கப்படும்...

First Published Dec 13, 2016, 9:16 AM IST
Highlights


சென்னையில் மின்சார ரயில் சேவை தொடங்குவதில் தாமதம்…மின்சாரம் கிடைத்த பின்னரே இயக்கப்படும்...

சென்னையை புரட்டிப் போட்ட வர்தா புயலால் சென்னை மாநகரமே  இருளில் மூழ்கிக் கிடக்கிறது. போக்குவரத்து இன்று காலை முதல்தான் ஓரளவு சீரடைந்துள்ளது. நேற்று மூடப்பட்ட சென்னை விமான நிலையம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. விமானங்கள் மீண்டும் இயக்கப்பட்டன.

சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்களை சீரமைக்கும்  பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இன்று இரவுக்குள் மின் இனைப்பு கொடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் திரு,தங்கமணி அறிவித்துள்ளார்.

சென்னை முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் புறநகர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்பாதை சீரமைக்கப்பட்ட பின்னர்தான் ரயில் சேவை தொடங்கப்படும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதேநேரத்தில் சென்னை மூர் மார்கெட்  அரக்கோணம் இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பறக்கும் ரயில் சேவையும் மின்பாதை சரிசெய்யப்பட்ட பின்னரே தொடங்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது, சென்னை எழுப்பூரில் இருந்து புறப்படும் பல்லவன் வைகை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரலில் இருந்து புறப்பட்டுச் செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்றுமுதல் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்துள்ளனர்.

click me!