இன்று மாலைதான் சென்னைக்கு கரண்ட்…அமைச்சர் தங்கமணி அதிரடி…

First Published Dec 13, 2016, 11:11 AM IST
Highlights


இன்று மாலைதான் சென்னைக்கு கரண்ட்…அமைச்சர் தங்கமணி அதிரடி…

வர்தா புயல் சென்னையை பீதிக்கு உள்ளாக்கி பின்னர் பெங்களூரை நோக்கி சென்று கொடிருக்கிறது. ஆனால் வர்தா சென்னையில் ஏற்படுத்திச் சென்ற பாதிப்பு மிக கொடுமையானது, நேற்று முழுவதும் பொதுமக்கள் வீட்டிற்குள்ளளேயே முடங்கிக் கிடந்தனர்.

சென்ற ஆண்டு இதே நேரத்தில் பெரு வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்பட்டதைப் போன்று இந்த ஆண்டு, வர்தா புயல் வாட்டி எடுத்துவிட்டது. ஆயிரக்கணக்கான  மின் கம்பங்கள் காற்றில் சாய்ந்தன.மரங்கள் சாய்ந்ததால் மின் வயர்கள் அறுந்து விழுந்ததால் சென்னை நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது.

பொது மக்கள் இரண்டு நாட்களாக வீடுகளில் கரண்ட் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தொலைக்காட்சி பார்க்க முடியாமலும், செல்போன், லேப்டாப் போன்ற தொலைத் தொடர்பு சாதனங்களுக்கு கரண்ட் சார்ஜ் பண்ண முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

 

எப்பபொழுது கரண்ட் வரும் என காத்திருந்தவர்களுக்கு  இன்று மாலை தான் கரண்ட் என தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சென்னை முழுவதும் 4000 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் சரிசெய்து வருவதாகவும் கண்டிப்பாக இன்று மாலை கரண்ட் என உறுதியளித்துள்ளார்.

click me!