ஜார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பேசும் போது வெடித்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அவ்வப்போது ஏற்படுகிறது.
பரமக்குடி அருகே செல்போன் வெடித்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் ரஜினி என்பவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரத்தில் செல்போன்களை பயன்படுத்திவிட்டு உறங்கும் போது படுக்கையில் சார்ஜ் போட்டுவிட்டு உறங்குவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், செல்போன் வெடித்து விபத்து நிகழ்கிறது. அதேபோல் ஜார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பேசும் போது வெடித்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அவ்வப்போது ஏற்படுகிறது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: Power Shutdown in Chennai: சென்னை மக்களே அலர்ட்.. நாளை எந்தெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா?
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் ரஜினி (36) என்பவர் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த போகோ எதிர்பாராத விதமாக வெடித்தது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த ரஜினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற மற்றொரு இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக கருவருக்க காத்திருக்கும் கும்பல்.. யார் இந்த பாம் சரவணன்? உளவுத்துறை அலர்ட்டால் பரபரப்பு
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரஜினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.