Breaking: தமிழகத்தை அதிரவைத்த பள்ளி மாணவன் கடத்தல் சம்பவம்; ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி விபரீத முடிவு

By Velmurugan s  |  First Published Jul 21, 2024, 7:12 PM IST

மதுரையில் பள்ளி சிறுவனைக் கடத்தில் ரூ.2 கோடி கேட்ட வழக்கில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யா குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டார்.


மதுரை மாவட்டம் SS காலனி பகுதியில் வசித்து வருபவர் மைதிலி ராஜலட்சுமி. இவருக்கு மதுரை பைபாஸ் சாலை பகுதியில் வீடுகள் மற்றும் வணிக வளாகம் உள்ளதா சொல்லப்படுகிறது. இவரது மகன் அருகில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் எப்பொழுதும் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.

Breaking: செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி; மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றம்

Tap to resize

Latest Videos

undefined

அந்த வகையில் கடந்த 11ம் தேதி மாணவன் ஆட்டோவில் பள்ளிக்குச் சென்ற போது ஆம்னி காரில் வந்து ஆட்டோவை மடக்கிய மர்ம நபர்கள் ஆட்டோ ஓட்டுநருடன் சேர்த்து சிறுவனை கடத்திச் சென்றனர். மேலும் மைதிலி ராஜலட்சுமியை தொடர்பு கொண்ட கடத்தல் நபர்கள் ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவலர்கள் கொள்ளையர்களை துரத்திச் சென்றனர்.

மதுரை அழகர் கோவில் தேர் திருவிழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தேரை இழுத்து வழிபாடு

காவலர்கள் துரத்துவதை அறிந்த கொள்ளையர்கள் ஆட்டோ ஓட்டுநருடன் சேர்த்து சிறுவனையும் நடுரோட்டில் இறக்கிவிட்டுச் சென்றனர். இந்த விவகாரம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வழக்கில் தொடர்புடைய 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யாவை கைது செய்யும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்த சூர்யா குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் மதுரையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

click me!