- Home
- Gallery
- Power Shutdown in Chennai: சென்னை மக்களே அலர்ட்.. நாளை எந்தெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா?
Power Shutdown in Chennai: சென்னை மக்களே அலர்ட்.. நாளை எந்தெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்லாவரம், அடையாறு, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Power Shutdown
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் அவ்வப்போது மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Power Cut
ஐடி காரிடார்:
ஆனந்த நகர், 200 அடி ரேடியல் சாலை மற்றும் சாய் நகரின் ஒரு பகுதி.
பல்லாவரம் :
மல்லிகா நகர், பி.வி. வைத்தியலிங்கம் சாலை, கட்டம்பொம்மன் நகர், ஆர்.கே.வி. அவென்யூ, திருமுருகன் நகர், மாணிக்கம் நகர், வேல்ஸ் கல்லூரி மெயின் ரோடு மற்றும் பங்காரு நகர் கிழக்கு பகுதி.
Power Shutdown in Chennai
அடையாறு:
காந்தி நகர் 2வது மெயின் ரோடு, காந்தி நகர் 2வது குறுக்குத் தெரு மற்றும் காந்தி நகர் 3வது மெயின் ரோட்டின் ஒரு பகுதி.
power shutdown areas chennai
தண்டையார்பேட்டை:
நேதாஜி நகர், நேரு நகர், குமரன் நகர், சிவாஜி நகர், சுந்தரம்பிள்ளை நகர், இ.எச்.ரோடு, அன்னைசத்திய நகர், படேல் நகர், பரமேஸ்வரன் நகர், அஜீஸ் நகர், நாவலூர் குவார்ட்டர்ஸ், துர்காதேவி நகர், பேசின் சாலை, பர்மா காலனி, ராஜீவ் காந்தி நகர்,கருணாநிதி நகர். இந்திரகாந்தி நகர், சிஐஎஸ்எஃப் குவார்ட்டர்ஸ், நெடுஞ்செழியன் நகர், வைத்தியநாதன் தெரு, கார்னேஷன் நகர், எழில் நகர், சந்திரசேகர் நகர், கே.எச்.ரோடு, மூப்பனார் நகர், மணலி சாலை, திருவள்ளுவர் நகர், மீனம்பாள் நகர், அண்ணாநகர், ஜே.ஜே.நகர், சுன்னம்புகல்வூர், விஓசி நகர், காருமரியம்மன் நகர், மாதா கோயில் தெரு, தியாகப்பசெட்டி தெரு, ஜீவா நகர், காமராஜ் நகர், சுதந்திரபுரம், சிகிரந்தபாளையம், மோட்சபுரம், பாரதி நகர் குவார்ட்டர்ஸ், ரிக்ஷா காலனி, நியூ சாஸ்திரி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.