சிபிஎஸ்இ பிளஸ் 2 முடிவுகள்.. பி.இ படிப்புகளுக்கு எப்போது வரை விண்ணப்பிக்கலாம்..? புதிய அறிவிப்பு

By Thanalakshmi V  |  First Published Jul 22, 2022, 10:51 AM IST

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 27-ம் தேதி வரை அவகாசம் அளித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், உயர்கல்வித்துறை புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. 
 


சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகின. 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், இன்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களது முடிவுகளை cbse.gov.in, cbseresults.nic.in, results.cbse.nic.in, results.gov.in , digilocker.gov.in ஆகிய இணையதளங்கள் மூலமாக பார்த்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க:மாணவர்களே உஷார் !! பி.இ கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் சொன்ன புது தகவல்..

Tap to resize

Latest Videos

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பில் ஒட்டுமொத்தமாக 92.71% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 91.25% யும் மாணவிகள் 93 % தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 98. 83 % தேர்ச்சிவிகிதம் பெற்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் முதலிடம் பிடித்துள்ளது. சென்னை மண்டலமானது 97.79% தேர்ச்சி பெற்று மூன்றாமிடத்தை பெற்றுள்ளது. 98.16% தேர்ச்சி பெற்று பெங்களூரு மண்டலம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

மேலும் படிக்க:CBSE: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.. ஒட்டுமொத்தமாக 92.71% பேர் தேர்ச்சி.. சென்னை முன்றாமிடம்

கடந்த ஆண்டு 99.04 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.  இந்நிலையில் தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 27-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.  CBSE பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், உயர்கல்வித்துறை புதிய  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் வரை கலை மற்றும் அறிவியல், பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.அதே போல் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் கடந்த 17 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், அதற்கான கால அவகாசம் தேதி குறிப்பிடாமல் நீட்டிக்கப்பட்டது. 

மேலும் படிக்க:சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்..? முழு விவரம்..

click me!