ரயில் முன் பாய்ந்த பிரபல தனியார் கல்லூரி மாணவி.. உடல் சிதறி உயிரிழந்த பரிதாபம்..!

Published : Jul 22, 2022, 07:04 AM ISTUpdated : Jul 22, 2022, 07:06 AM IST
ரயில் முன் பாய்ந்த பிரபல தனியார் கல்லூரி மாணவி.. உடல் சிதறி உயிரிழந்த பரிதாபம்..!

சுருக்கம்

வழக்கம் போல கல்லூரி செல்ல சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையத்துக்கு இவர் வந்துள்ளார். பின்னர், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில் முன் பாய்ந்துள்ளார். 

செங்கல்பட்டு அருகே கல்லூரி மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம்  சிங்கபெருமாள்கோவில் அடுத்த திருக்கச்சூர் கிராமம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. கூலி தொழிலாளி. இவரது மகள் பட்டு என்ற நிரோஷா (20). இவர் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் 3ம் ஆண்டு பிஎஸ்சி நர்சிங் படித்து வந்தார். இந்நிலையில், வழக்கம் போல கல்லூரி செல்ல சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையத்துக்கு இவர் வந்துள்ளார். பின்னர், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில் முன் பாய்ந்துள்ளார். 

மேலும் படிக்க;- முடிவெட்ட சொன்ன ஹெட் மாஸ்டர்.. நேராக சென்று பூச்சி மருந்தை குடித்த பிளஸ் 2 மாணவன்..!

இதில், நிரோஷா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, நிரோஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த குடும்பத்தினர் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுதனர். 

மேலும் படிக்க;-  ரயில்பெட்டி மீது ஏறி செல்ஃபி.. மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவன் உயிரிழப்பு..!

இதுதொடர்பாக,  போலீசார் வழக்குப்பதிவு செய்து  குடும்ப பிரச்னையால் இவர்  தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது, காதல் விவகாரத்தால்  தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். நர்சிங் மாணவி ரயிலில் இருந்து குதித்து   தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க;-  உயிரிழந்த மகனை கட்டித்தழுவி அழுது.. அதே இடத்தில் மாரடைப்பால் துடிதுடித்து இறந்த தாய்.. செங்கல்பட்டில் சோகம்.!

PREV
click me!

Recommended Stories

சென்னைதான் எப்பவும் டாப்! போகிக்கும் பொங்கலுக்கும் சேர்த்து ரூ. 518 கோடி மது விற்பனை!
அனல் பறந்த பாலமேடு ஜல்லிக்கட்டு.. குலுக்கல் முறையில் காரைத் தூக்கிய அஜித்! டிராக்டர் வென்ற குலமங்கலம் காளை!