ஈபிஎஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு! சொத்து மதிப்பை குறைத்துக் கூறியது தொடர்பான வழக்கில் நடவடிக்கை

By SG Balan  |  First Published May 7, 2023, 10:08 AM IST

2021 சட்டசபை தேர்தலில் வேட்பு மனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியதாக எழுந்த புகாரின் பேரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2021 சட்டசபை தேர்தலில் வேட்பு மனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியதாக எழுந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மிலானி என்பவர் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யலாம் என்று காவல்துறைக்கு அறிவுறுத்தியது. அதன்படி சேலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Latest Videos

undefined

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. 125ஏ(1), 125ஏ(I), 125ஏ(II) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் பழனிசாமி 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தாக்கல் செய்த வேட்புமனு மற்றும் பிரமாண பத்திரத்தில், சொத்து விபரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளதாகவும் அதற்காக ஈபிஎஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி வழக்கறிஞர் மிலானி வழக்கு தொடர்ந்தார்.

click me!