தேர்தலில் கொடுத்த வாக்குறுதியான 'வேளாண்மைக்கு தனி பட்ஜெட்' சாத்தியமானது திமுக ஆட்சியில்!!

By Ramya s  |  First Published May 7, 2023, 4:05 AM IST

இந்தியாவின் முதுகெலும்பாக இருப்பது விவசாயம். உணவுப் பாதுகாப்பில் தன்னிறைவை அடையவும், நாட்டு மக்களின் நலன் காக்கவும், வேளாண் வளர்ச்சி மிகவும் முக்கியமானதாகும்.


ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண்மைத் தொழில் முக்கியமானது. தமிழகத்தில் ஏறத்தாழ 40 சதவீத மக்களுக்கு குறிப்பாக பெரும்பாலான கிராமப்புற மக்களுக்கு வேளாண்மைத் தொழிலே முக்கிய தொழிலாகவும், வாழ்வாதாரமாகவும் உள்ளது. 

தேக்கநிலை

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் கடந்த காலங்களில், மண்வளச் சீர்கேடு, குறைந்துவரும் நீர்வள ஆதாரங்கள், கிராமப்புறத்தில் வேளாண் தொழிலுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுக்கு போதிய முதலீடு, போதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் இல்லாமை, இடுபொருட்களின் விலை ஏற்றம் ஆகிய காரணங்களால் வேளாண் தொழிலில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டு இருந்தது. #2YrsOfDravidianModel

தனி நிதிநிலை அறிக்கை

இதைக் களைந்து, வேளாண்மையில் அதிக உற்பத்தியை அடைய, விவசாயிகளுக்குத் தேவையான பயிர்வாரியான/ பகுதிவாரியான உத்திகளை வகுத்து, கிராமப்புறத்தில் வேளாண் தொழிலுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும். இதற்காக தமிழ்நாட்டு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக, கடந்த 2021-ம் ஆண்டில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையை (தனி பட்ஜெட்) தாக்கல் செய்தது. #2YrsOfDravidianModel  

விவசாயிகள் வரவேற்பு

விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, பதவியேற்ற முதல் ஆண்டிலேயே வேளாண்மைக்கான தனி நிதி நிலை அறிக்கையை அரசு தாக்கல் தாக்கல் செய்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை வகுத்தால், அத்துறை வளர்ச்சியடையும் என்ற பொருளாதார நிபுணர்களின் நீண்ட நாள் வலியுறுத்தலும் இதன் மூலம் நிறைவேற்றப்பட்டது. 

வேளாண் அறிக்கை

மேலும், வேளாண்மைத் துறை என இருந்தது, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. உழவர் நலன் காத்திட தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தி.மு.க. அரசால் இதுவரை 3 வேளாண் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 250 அறிவிப்புகளில் 247 அறிவிப்புகளுக்கான நிதி ஒதுக்கி அரசாணைகள் வெளியிடப்பட்டன.  வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டும் உள்ளன. #2YrsOfDravidianModel

கருத்துக்கள் சேகரிப்பு

இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அமைச்சர்கள், குறிப்பாக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர், விவசாய சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவன பிரதிநிதிகள், ஆராய்ச்சியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களைத் தொகுத்து, ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது.

மாவட்ட வாரியாக திட்டங்கள்

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அங்கும் விளையும் சிறப்பான பயிர்களுக்கான தேவை என்ன என்பதை, விவசாயிகளிடம் கேட்டறிந்து, அதற்கென தனியாக திட்டம் தயாரித்து, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படுகிறது. தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் வகையில் சில திட்டங்கள் வடிவைக்கப்பட்டுள்ளன. #2YrsOfDravidianModel

விவசாயிகளுக்கு ஊக்கப் பரிசு

எடுத்துக்காட்டாக, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம், நெல் ஜெயராமன் மரபுசார் இயக்கம், சாதனைபுரியும் விவசாயிகளுக்கான வருடாந்திர ஊக்க பரிசுத்தொகை, இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் ஆகியவை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

தொடரும் இலவச மின்சாரம்

2020-21-ம் ஆண்டில் வேளாண்மைக்கென ஒதுக்கப்பட்ட நிதி ரூ.11,894.48 கோடி. இந்த ஆண்டு ரூ.14,254. 45 கோடியாக அதிகரித்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 23 இலட்சத்திற்கும் மேற்பட்ட வேளாண் பம்புசெட்களுக்கான மின் கட்டணத்தையும் மாநில அரசே செலுத்தும்வகையில் 2021-21ஆம் ஆண்டில் ரூ.4508.23 கோடியும், 20222-23ஆம் ஆண்டில் ரூ.5,157.56 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது. நடப்பு 2023-24ஆம் ஆண்டில் ரூ.6,536 கோடி ஒதுக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் நிலத்தடி நீரை முழுவதுமாகப் பயன்படுத்தி சாகுபடிசெய்ய ஏதுவாக அமைந்தது.

மதிப்புக்கூட்டல் விலை

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற நாள் முதல், பயிர் சாகுபடி மட்டுமல்லாமல், அறுவடைக்குப்பின் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி, விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனும் நோக்கில், இந்த அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் மதிப்புக்கூட்டி விற்பனைசெய்ய சிறுதானிய பதப்படுத்தும் மையங்களுக்கு மானியம், பழங்குடியின விவசாயிகளுக்கு மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய 70% மானியம் வழங்கப்படுகிறது. எண்ணெய்வித்துக்கள், மிளகாய், கறிவேப்பிலை, முருங்கை, பலா, பனை பொருட்கள் போன்ற விளைபொருட்களை உரிய தரத்தில் மதிப்புக்கூட்டவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 

சிறுதானியம்

சிறுதானியப் பயன்பாட்டை அதிகரிக்கும்வகையில் நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கூட்டுறவுத்துறை மூலம் 2 கிலோ சிறுதானியங்கள் வழங்கப்பட்டுவருகிறது. சிறுதானியங்களுக்காக ரூ.32 கோடியும், முருங்கைக்கு ரூ.11 கோடியும் , தக்காளிக்கு ரூ. 19 கோடியும், வெங்காயத்திற்கு ரூ.29 கோடியும், சௌசௌ, பட்டாணி, பீன்ஸ் ஆகியவற்றுக்கு ரூ.2.5 கோடியும், பாரம்பரிய காய்கறி உற்பத்திக்கு ரூ.1.5 கோடி என வேளாண் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய தோட்டக்கலை இயக்கம், நுண்ணீர்ப் பாசனத் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் உட்பட்ட திட்டங்களில் ஒரு. 1000 கோடிக்கும் மேல் ஒதுக்கப்பட்டு காய்கறி உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. #2YrsOfDravidianModel

சர்க்கரை ஆலை

ஓடாமல் இருந்த சர்க்கரை ஆலைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதும் சீர்திருத்தம் செய்து, அவற்றை சிறப்பாக இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் கரும்புக்கு 2016-17 முதல் 2019-20 வரை டன்னுக்கு ரூ. 2,750 மட்டுமே வழங்கப்பட்டது வந்தது. ஆனால் திமுக அரசில் கரும்பு விவசாயிகளுக்கு பல்வேறு நடத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதன் விளைவாக 2021-21-ல் ரூ.2,900-ம், 2021-22-ம் ஆண்டில் ரூ.2,950-ம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 2023-24-ம் ஆண்டில் டன்னுக்கு கூடுதலாக 195 ரூபாய் அறிவித்ததால் கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.3,016.25 கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நெல் ஊக்கத்தொகை

அதேபோல, நெல்லுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குமேல், மாநில அரசின் ஊக்கத்தொகையும், குவிண்டாலுக்கு சன்ன ரகத்துக்கு ரூ.100-ம், பொது ரகத்திற்கு ரூ.75ம் வழங்கி, தற்போது சன்ன ரகத்துக்கு ரூ.2,160-ம், பொது ரகத்திற்கு ரூ. 2,115-ம் கிடைத்துவருகிறது. இவ்வாறு நெல்லுக்கு வழங்கப்பட்டு வரும் மாநில அரசின்  ஊக்கத்தொகை காரணமாக நெல் கொள்முதல் கணிசமாக அதிகரித்துள்ளது. இது திமுக அரசின் வெற்றியாக கருதப்படுகிறது.

click me!