பிடிஆர் பதவிக்கு வேட்டு... முட்டுக்கட்டை போடும் அமைச்சர்... அமைச்சரவை மாற்றம் எப்போது?

By SG Balan  |  First Published May 8, 2023, 3:15 PM IST

முதல்வர் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை முக்கிய உயர் அதிகாரிகள் இருவருடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த ஆலோசனைக் 2 மணி நேரம் நீடித்ததாகச் சொல்லப்படுகிறது.


முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மூன்றாவது ஆண்டு ஆட்சியைத் தொடங்கியிருக்கும் நிலையில், அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட ஆலோசனை நடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம், அமைச்சரவை மாற்றம் ஆகியவற்றுடன் துணை முதல்வர்களை நியமிப்பது தொடர்பாகவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இத்துடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபியாக சைலேந்திர பாபு ஆகியோரும் விரைவில் பணி ஓய்வு பெறவுள்ளனர். அவர்களுக்குப் பின் புதிய அதிகாரிகள் அந்தப் பதவிகளில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

Latest Videos

கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் பி.ஏ. தினேஷ் ஆகியோருடன் அதிகாரிகளினை பணியிட மாற்றம் பற்றி ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டம் இரண்டு மணி நேரம் நீடித்ததாக அரசு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி! மதுரை எம்.பி. சொன்ன மகிழ்ச்சியான செய்தி

முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் நிதியமைச்சர் பதவிக்கு பழனிவேல் தியாகராஜனுக்குப் பதிலாக புதியவரை நியமித்தால் நிதித்துறை செயலாளராகப் பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாக விரும்பபம் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இது குறித்து பேசியபோது, அவர் தனது இலாகா மாற்றத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

முதல்வர் நடத்திய இந்த ஆலோசனை சந்திப்பின்போது சபரீசன் உடன் இல்லை என்பதால் அமைச்சரவை மாற்றத்தில் அவரது தலையீடு இருக்காது எனவும் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதே சமயம் சபரீசன் சென்னையில் ஐபிஎல் போட்டியைப் பார்க்கச் சென்று ஓ. பன்னீர்செல்வத்துடன் பேசியது முதல்வர் குடும்பத்துக்குப் பிடிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.

ஆடியோ விவகாரத்துக்குப் பின்பு சில அமைச்சர்களும் பிடிஆர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே விரைவில் பழனிவேல் தியாகராஜனுக்கு நிதி அமைச்சர் பதவிக்குப் பதிலாக வெறொருவர் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. தங்கம் தென்னரசு மறுத்தாலும் அவரிடமே நிதித்துறையை ஒப்படைக்கலாம். பழனிவேல் தியாகராஜனுக்கு வேறு இலாகா வழங்கப்படலாம் என தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

தமிழ்நாடு அமைதியான மாநிலம்... போலி வீடியோவைப் பரப்பி அமைதியை சீர்குலைக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம்

இவ்வாறு, பிடிஆர் நிதி அமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்படமால் என்று பேசப்பட்டுவரும் இந்தச் சூழலில், இரண்டு ஆண்டு ஆட்சியில் அரசின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக நடத்தப்படும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் பேசுவோர் பட்டியலில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கப்பட்டுள்ளது. முதலில் வெளியான பட்டியலில் அவரது பெயர் இருந்தாலும், திருத்தப்பட்ட பட்டியலில் அவருக்குப் பதில் பொருளாதார வல்லுநர் ஜெ. ஜெயரஞ்சன் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே, பிடிஆர் முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டி நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். "மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் சமூகநீதி அரசு மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், அவர்தம் அமைச்சரவையில் பணியாற்றும் வாய்ப்பை என் வாழ்வில் கிடைத்த மகத்தான வெகுமதியாகவும், மன நிறைவளிக்கும் அனுபவமாகவும் எண்ணுகிறேன்." என்று கூறியுள்ளார்.

மேலும், "இந்த ஆட்சி அடைந்துள்ள வெற்றிகளை எடுத்துரைத்தாலும், இத்தருணத்தில் எனது தலைவருக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில், உன்னதமான சமத்துவ சமூகத்தைப் படைக்க வேண்டும் என்கிற எங்கள் கழகத்தின் லட்சியம் மாண்புமிகு முதல்வரின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவத்தின் மூலமே செயல் வடிவம் பெறுகிறது" என்று முதல்வருக்கு சிறப்பாக நன்றியும் கூறி இருக்கிறார்.

பெங்களூருவில் ஸ்கூட்டரில் சென்று டெலிவரி ஊழியர்களுடன் தோசை சாப்பிட்ட ராகுல் காந்தி!

click me!