தமிழகத்தில் முதன்முறையாக! பெண் தலைமையின் கீழ்! புதிய லோகோவை வெளியிட்ட அமைச்சர்!

தமிழகத்தின் முதல் பெண் தலைமையிலான வணிகவியல் கல்வி தொழில்நுட்ப தளம். CA, CMA, ACCA, CS படிப்புகளை குறைந்த கட்டணத்தில்.

business education technology platform under female leadership in Tamil Nadu tvk

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக பெண் ஒருவரின் தலைமையின் கீழ் இயங்கக்கூடிய வணிகவியல் கல்வி தொழில்நுட்பத் தளமான Edu Home connect.com லோகோவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். எஜுடெக் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான விர்ச்சுவல் ஸ்கில் ரைசர் எஜுடெக் பிரைவேட் லிமிடெட் சார்பில் CA, CMA, ACCA, CS ஆகிய வணிகவியல் தொழில்முறை படிப்புகளை அனைத்து தரப்பு மக்களும் எளிதில் அணுகலாம். அதுமட்டுமல்லாமல் குறைவான கட்டணத்தில் கற்பிக்கலாம். 

தற்போது வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் ஏஐ-யைப் பயன்படுத்தி எங்கிருந்து வேண்டுமானாலும் வணிகவியல் தொழில்முறை படிப்புகளுக்குப் பயிற்சி பெறுவதற்காக வீடியோ வகுப்புகள், நேரடி வகுப்புகள், தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது. மேலும், மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள், ஸ்டேடி மெட்டீரியல்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. 

Latest Videos

இதையும் படிங்க: மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒரு லேப்டாப் விலை இவ்வளவா.? சட்டசபையில் வெளியான முக்கிய தகவல்

இதற்காக எஜுஹோம் கனெக்ட், எஜுகேம்பஸ் கனெக்ட், எஜுஸ்கில் கனெக்ட் என 3 விதமான கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. எஜுஹோம் கனெக்ட் என்பது B2C மாடலில் இயக்கக்கூடியது. அதாவது எஜுஹோம் கனெக்ட் பயிற்சி மையம் மாணவர்களுடன் தனிப்பட்ட முறையில் இணைந்திருந்து வழிகாட்டுதல் மற்றும் பயிற்சிகளை வழங்கும். எஜுகேம்பஸ் கனெக்ட் என்பது B2B மாடலில் இயக்கக்கூடியது. 

விர்ச்சுவல் ஸ்கில் ரைசர் எஜுடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை சி.எம்.ஏ. பாத்திமா டெல்ஃபா என்பவர் வழிநடத்தி வருகிறார். இவர் கடந்த 7 ஆண்டுகளாக  CA, CMA, ACCA, CS ஆகிய பயிற்சி தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வகுப்பெடுத்து வருகிறார். இதன் மூலமாக பெண் தலைமையின் கீழ் இயக்கக்கூடிய வணிகவியல் கல்வி சார்ந்த தொழில்நுட்ப நிறுவனம் என்ற பெருமையை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

பாத்திமா டெல்ஃபாவின் கணவரான  முகமது அஸ்தஃப் Edu Home connect.com நிறுவனத்தின் செயலாளர் மற்றும் முதன்மை ஆலோசகராக விளங்கி வருகிறார். இவர் காஸ்ட் அக்கவுண்டிங்  துறையில் கணக்காளராகவும், முன்னணி நிதி ஆலோசகராகவும் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். மேலும், தனது 15 ஆண்டு கால அனுபவத்தைக் கொண்டு, இந்தியா முழுவதும் சி.ஏ. தேர்விற்கு பயிற்சி பெற்று வரும் ஏராளமானவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். 

இதையும் படிங்க: இரண்டு நாட்கள் விடுமுறை! மாணவர்களுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் போக்குவரத்துறை கொடுத்த இன்ப அதிர்ச்சி!

இந்திய நிறுவனச் செயலர்கள் நிறுவனம் (ICMAI) நிறுவனச் செயலர் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு வழங்கும் மெரிட் ஸ்காலர்ஷிப்பை பெற்றவர். இவர் எழுதிய "Cost and Management Audit"என்ற புத்தகத்தை முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி. ரங்கராஜன் வெளியிட்டுள்ளார். இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் (ICMAI) நிறுவனத்தின் தென்னிந்திய பிராந்திய கவுன்சிலைக் குறிக்கும் SIRC அமைப்பில் மாணவர்களுக்கு தொடர்ச்சியான தொழில்முறை கல்வியை வழங்கக்கூடிய ஆசிரியராக உள்ளார். மேலும், அகில இந்திய தரவரிசைதாரர்களையும், துடிப்பான ஆளுமை கொண்ட மாஸ்டர் மோட்டிவேட்டரையும் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.  சென்னையில் முன்னணி காஸ்ட் ஆடிட்டராக வலம் வரும் முகமது அஸ்தஃப், Cost and Managenentல் நிபுணத்துவம் பெற்றவர்.

vuukle one pixel image
click me!