கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு.. என்ன காரணம் தெரியுமா?

Published : Jan 23, 2023, 10:52 AM IST
கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு.. என்ன காரணம் தெரியுமா?

சுருக்கம்

திருப்பத்தூர் மாவட்டத்தை அடுத்த கணபாளையம் கிராமத்தை சேர்ந்த துருவன் (27). கட்டிட மேஸ்திரி. அதே இடத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் பானுப்பிரியா (25) கட்டிடப் பணியில் கூலி வேலை செய்து வந்தார். 

திருமணமான மூன்றே நாளில் புதுமணப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தை அடுத்த கணபாளையம் கிராமத்தை சேர்ந்த துருவன் (27). கட்டிட மேஸ்திரி. அதே இடத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் பானுப்பிரியா (25) கட்டிடப் பணியில் கூலி வேலை செய்து வந்தார். அப்போது, இருவரும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இருவரும் கடந்த 3 நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட நாளில் இருந்தே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால், மணவேதனை அடைந்த பானுப்பிரியா விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியில் துருவனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பானுப்பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  திருமணமாகி மூன்றே நாள்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் கோட்டாச்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டாஸ்மாக் பிரியர்களுக்கு அதிர்ச்சி: அக்டோபர் முதல் பாட்டிலுக்கு ரூ.20 வரை விலை உயர்வு; புதிய வரி விதிக்க தமிழக அரசு முடிவு?
Rice price: கட்டுக்குள் வருமா அரிசி விலை? கிடுகிடு உயர்வுக்கு என்ன காரணம்? எப்போது குறையும்?