Tamil News Live Updates: ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி சாமி தரிசனம் !!
Jan 20, 2024, 7:30 PM IST
20 நிமிட ஓய்வுக்கு பிறகு ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றார் பிரதமர் மோடி.
7:30 PM
ஶ்ரீரங்கத்தில் இருந்து அயோத்திக்கு சீதனம் எடுத்து செல்லும் பிரதமர் மோடி - என்ன சீதனம்?
3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடத்துகிறார். இதற்காக சென்னையில் இருந்து பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.
6:46 PM
10 விஷ்ணு அவதாரங்கள்.. ராமர் சிலையின் எடை? உயரம் என்ன? ராமர் சிலை பற்றி ஆச்சர்ய தகவல்கள்!
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. குழந்தை ராமர் சிலையின் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
5:55 PM
அயோத்தி ராமர் கோவில்: சேதமடைந்த தேசிய உணர்வின் மறுமலர்ச்சி.. சத்குரு உரை.!!
ராமர் கோவில் கட்டுவது, சேதமடைந்த தேசிய உணர்வின் மறுமலர்ச்சி என்று சத்குரு கூறினார். அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை இந்திய நாடே முழுவதும் ஒன்றிணைந்து வரவேற்கிறது.
5:26 PM
ராமேஸ்வரம்: அக்னி தீர்த்த கடலில் நீராடிய பிரதமர் நரேந்திர மோடி.. பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!!
பிரதமர் மோடி இன்று காலை திருச்சி ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பிறகு ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடினர்.
5:04 PM
பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம்.!!
பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் சென்று அங்கு சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.
நேரலையில் காண : https://www.youtube.com/watch?v=LmGih9FwtNk
3:36 PM
ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்
20 நிமிட ஓய்வுக்கு பிறகு ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றார் பிரதமர் மோடி
3:35 PM
திருச்சி டூ ராமேஸ்வரம் பயணம்
திருச்சி வந்த பிரதமர் மோடி, ஸ்ரீரங்கம் தரிசனத்தை முடித்துவிட்டு ராமேஸ்வரம் சென்றார்.
3:34 PM
திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி
திருச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவிலுக்கு வருகை தந்தார் பிரதமர் மோடி.
3:33 PM
திருச்சியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
ஸ்ரீ ரங்கநாதரை தரிசிக்க வந்த பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் பிரம்மாண்ட வரவேற்பை அளித்தனர்.
2:21 PM
விபீஷணன் - இலங்கை - ஸ்ரீரங்கம்.. ஸ்ரீராமரால் வழிபட்ட கடவுளை வணங்கிய பிரதமர் மோடி - இந்த வரலாறு தெரியுமா?
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகை மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். ஸ்ரீரங்கத்துக்கும், விபீஷணனுக்கும் இடையே உள்ள தொடர்பு பலருக்கும் தெரிவதில்லை.
1:54 PM
எதுக்கு தமிழகம் மட்டும் மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருப்பது ஏன்? ஆளுங்கட்சியை விளாசும் டிடிவி.தினகரன்..!
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
1:54 PM
திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் தலித் மாணவி சித்திரவதை.. ஒருத்தரையும் சும்மாவிடக்கூடாது.. கொந்தளிக்கும் ராமதாஸ்.!
மாணவி ரேகாவை மனிதராகக் கூட மதிக்காமல் கொடுமைகளுக்கு உள்ளாக்கிய ஆண்டோ மதிவாணன் - மெர்லின் ஆகியோர் தப்புவதற்கு தமிழக அரசும், காவல்துறையும் அனுமதிக்கக்கூடாது என ராமதாஸ் கூறியுள்ளார்.
1:27 PM
அதிக வேகம்.. சூப்பரான மைலேஜ்.. பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு தெரியுமா?
பிஎம்டபிள்யூ தனது சிஇ 02 (BMW CE 02) எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த ஆண்டு வெளியிட உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
1:01 PM
ராமர் படம் போட்ட புதிய 500 ரூபாய் நோட்டு - இணையத்தில் வைரல்.. உண்மையா? பொய்யா? முழு விபரம் இதோ!
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி ராமர் படம் போட்ட புதிய 500 ரூபாய் நோட்டு தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
12:16 PM
சென்னை ராஜ்பவன் வளாகத்தில் புனித ருத்ராட்ச மரக்கன்றுகளை நட்ட பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை ராஜ்பவன் வளாகத்தில் புனித ருத்ராட்ச மரக்கன்றுகளை நட்டு அதற்கு தண்ணீர் ஊற்றினார். அப்போது தமிழக ஆளுநர் ஆன்.என்.ரவி மற்றும் அவரது மனைவி உடனிருந்தனர்.
12:14 PM
நுகர்வோர் சேவை மதிப்பீடு.. Powerthon 20240-ஐ அறிமுகப்படுத்திய மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் !
மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் ஆர்பிஎம் (RPM) கூட்டத்திற்கு தலைமை தாங்கி, நுகர்வோர் சேவை மதிப்பீடுகள் மற்றும் Powerthon 2024 ஐ அறிமுகப்படுத்தினார்.
12:05 PM
பி.எப் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. இனிமேல் இது செல்லாது.. உடனே தெரிஞ்சுக்கோங்க..
இ.பி.எப்.ஓ தற்போது மிகப்பெரிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதனை பி.எப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.
12:01 PM
அட வேற லெவல் போங்க.. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பட்டுவேட்டியுடன் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி..!
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி பட்டுவேட்டி கட்டி வந்து மூலவர் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார்.
11:06 AM
பொது மக்களை பார்த்து கையசைத்தபடி சென்ற பிரதமர் மோடி
திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்த பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு கார் மூலம் புறப்பட்டார். அவருக்கு வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
10:41 AM
பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை.. 40 தமிழக மீனவர்கள் விடுதலை
பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்திற்கு வருவதை ஒட்டி தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறைகளில் உள்ள 40 தமிழக மீனவர்களை விடுதலை செய்யப்பட்டனர்.
10:13 AM
திருச்சி வந்தடைந்த பிரதமர் மோடி
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் செல்ல உள்ளார்.
9:25 AM
பிரதமர் மோடி சென்னை ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டார்
சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்கு சென்று காலை 11.30 மணிக்கு ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார்.
8:58 AM
ஸ்ரீ ரங்கம் கோயிலில் பிற்பகல் 3.30 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை
திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயிலில் பிரதமர் மோடி இன்று சாமி தரிசனம் செய்ய உள்ள நிலையில், பிற்பகல் 3.30 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை.
8:56 AM
அதிகாலையில் நடந்த கோர விபத்து.. துடிதுடித்து உயிரிழந்த 4 பேர்.. நடந்தது என்ன?
பட்டுக்கோட்டை அருகே தடுப்புச் சுவர் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
8:02 AM
கொடுமைப்படுத்தியதை சொல்லி கதறும் ரேகா! நெஞ்சை உலுக்குகிறது! ஆளுங்கட்சி எம்எல்ஏ மகனுக்கு எதிராக திமிரும் திருமா
ரேகாவை நள்ளிரவு வரை வேலை செய்யச்சொல்லி அடித்ததுடன், சாதியைச் சொல்லியும் இழிவுபடுத்தி கொடுமைப்படுத்தியதாகவும் சொல்லி அந்த பெண் கதறுவது நெஞ்சை உலுக்குகிறது என திருமாவளவன் கூறியுள்ளார்.
8:02 AM
Power Shutdown in Chennai: இன்னைக்குனு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் 5 மணிநேரம் மின்தடையா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
8:01 AM
5 நாட்களில் நிறுத்திய திமுக அரசு! பாதி பேருக்கு பொங்கல் பரிசு கிடைக்கல! ஆளுங்கட்சியை லெப் ரைட் வாங்கும் இபிஎஸ்.!
பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பை சுமார் 25 சதவீதத்துக்கும் மேலான குடும்ப அட்டைதாரர்கள் வாங்காத நிலையில், ஐந்தே நாட்களில் நிறுத்திய திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
7:33 AM
பிரதமர் மோடி இன்று ஸ்ரீரங்கம், ராமநாதசாமி கோவிலுக்கு செல்கிறார்
3 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி காலை 11 மணிமுதல் 12.40 வரை திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் மதியம் 2 மணிக்கு ராமேஸ்வரத்துக்கு செல்லும் பிரதமர் மோடி ராமநாதசாமி கோயிலில் வழிநாடு செய்ய உள்ளார். இதன் காரணமாக கோயிலை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு, மூவாயிரத்து 700 போலீசார் கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
7:32 AM
சென்னையில் 609வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை.!
சென்னையில் 609வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
7:30 PM IST:
3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடத்துகிறார். இதற்காக சென்னையில் இருந்து பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.
6:46 PM IST:
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. குழந்தை ராமர் சிலையின் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
5:55 PM IST:
ராமர் கோவில் கட்டுவது, சேதமடைந்த தேசிய உணர்வின் மறுமலர்ச்சி என்று சத்குரு கூறினார். அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை இந்திய நாடே முழுவதும் ஒன்றிணைந்து வரவேற்கிறது.
5:26 PM IST:
பிரதமர் மோடி இன்று காலை திருச்சி ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பிறகு ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடினர்.
5:04 PM IST:
பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் சென்று அங்கு சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.
நேரலையில் காண : https://www.youtube.com/watch?v=LmGih9FwtNk
3:36 PM IST:
20 நிமிட ஓய்வுக்கு பிறகு ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றார் பிரதமர் மோடி
3:35 PM IST:
திருச்சி வந்த பிரதமர் மோடி, ஸ்ரீரங்கம் தரிசனத்தை முடித்துவிட்டு ராமேஸ்வரம் சென்றார்.
3:34 PM IST:
திருச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவிலுக்கு வருகை தந்தார் பிரதமர் மோடி.
3:33 PM IST:
ஸ்ரீ ரங்கநாதரை தரிசிக்க வந்த பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் பிரம்மாண்ட வரவேற்பை அளித்தனர்.
2:21 PM IST:
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகை மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். ஸ்ரீரங்கத்துக்கும், விபீஷணனுக்கும் இடையே உள்ள தொடர்பு பலருக்கும் தெரிவதில்லை.
1:54 PM IST:
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
1:54 PM IST:
மாணவி ரேகாவை மனிதராகக் கூட மதிக்காமல் கொடுமைகளுக்கு உள்ளாக்கிய ஆண்டோ மதிவாணன் - மெர்லின் ஆகியோர் தப்புவதற்கு தமிழக அரசும், காவல்துறையும் அனுமதிக்கக்கூடாது என ராமதாஸ் கூறியுள்ளார்.
1:27 PM IST:
பிஎம்டபிள்யூ தனது சிஇ 02 (BMW CE 02) எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த ஆண்டு வெளியிட உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
1:01 PM IST:
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி ராமர் படம் போட்ட புதிய 500 ரூபாய் நோட்டு தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
12:16 PM IST:
பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை ராஜ்பவன் வளாகத்தில் புனித ருத்ராட்ச மரக்கன்றுகளை நட்டு அதற்கு தண்ணீர் ஊற்றினார். அப்போது தமிழக ஆளுநர் ஆன்.என்.ரவி மற்றும் அவரது மனைவி உடனிருந்தனர்.
12:14 PM IST:
மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் ஆர்பிஎம் (RPM) கூட்டத்திற்கு தலைமை தாங்கி, நுகர்வோர் சேவை மதிப்பீடுகள் மற்றும் Powerthon 2024 ஐ அறிமுகப்படுத்தினார்.
12:05 PM IST:
இ.பி.எப்.ஓ தற்போது மிகப்பெரிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதனை பி.எப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.
12:01 PM IST:
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி பட்டுவேட்டி கட்டி வந்து மூலவர் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார்.
11:06 AM IST:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்த பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு கார் மூலம் புறப்பட்டார். அவருக்கு வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
10:41 AM IST:
பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்திற்கு வருவதை ஒட்டி தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறைகளில் உள்ள 40 தமிழக மீனவர்களை விடுதலை செய்யப்பட்டனர்.
10:13 AM IST:
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் செல்ல உள்ளார்.
9:25 AM IST:
சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்கு சென்று காலை 11.30 மணிக்கு ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார்.
8:58 AM IST:
திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயிலில் பிரதமர் மோடி இன்று சாமி தரிசனம் செய்ய உள்ள நிலையில், பிற்பகல் 3.30 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை.
8:56 AM IST:
பட்டுக்கோட்டை அருகே தடுப்புச் சுவர் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
8:02 AM IST:
ரேகாவை நள்ளிரவு வரை வேலை செய்யச்சொல்லி அடித்ததுடன், சாதியைச் சொல்லியும் இழிவுபடுத்தி கொடுமைப்படுத்தியதாகவும் சொல்லி அந்த பெண் கதறுவது நெஞ்சை உலுக்குகிறது என திருமாவளவன் கூறியுள்ளார்.
8:02 AM IST:
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
8:01 AM IST:
பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பை சுமார் 25 சதவீதத்துக்கும் மேலான குடும்ப அட்டைதாரர்கள் வாங்காத நிலையில், ஐந்தே நாட்களில் நிறுத்திய திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
7:33 AM IST:
3 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி காலை 11 மணிமுதல் 12.40 வரை திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் மதியம் 2 மணிக்கு ராமேஸ்வரத்துக்கு செல்லும் பிரதமர் மோடி ராமநாதசாமி கோயிலில் வழிநாடு செய்ய உள்ளார். இதன் காரணமாக கோயிலை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு, மூவாயிரத்து 700 போலீசார் கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
7:32 AM IST: