Tamil News Live Updates: பொதுத்தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை.. அமைச்சர் தகவல்

10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை. பள்ளிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ததற்கு பின்பாக பள்ளிகள் திறக்கப்படும். தென் மாவட்டங்களில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கான பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்த பின்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். 

11:25 PM

தங்க ஆஃபர்: தங்கம் வாங்கினால் ரூ. 500 தள்ளுபடி.. மிஸ் பண்ணிடாதீங்க..

மத்திய அரசு தங்கம் தொடர்பான முதலீட்டு திட்டத்தில் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன் மூலம் 500 ரூபாய் அளவுக்கு தள்ளுபடி கிடைக்கும்.

10:44 PM

எல்லாமே பொய்.. அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் ராஜ்பவன் கொடுத்த புது விளக்கம்..

பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு முதல்வருக்கு ஆளுநர் அறிவுரையா? என்று கேள்வி எழுப்பி ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது.

10:05 PM

காலை 10.30.. நேரம் குறித்த நீதிமன்றம்.. அமைச்சர் பொன்முடி வழக்கில் தண்டனை விவரம் நாளை வெளியாகிறது..

அமைச்சர் பொன்முடி வழக்கில் தண்டனை விவரம் நாளை காலை 10:30க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

8:59 PM

அயோத்தி சாலைகளில் தமிழ் எழுத்துகள்.. ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் தடபுடல் ஏற்பாடுகள்..

அயோத்தியின் சாலைகளில் தமிழ் மற்றும் தெலுங்கில் பலகைகள் நிறுவப்பட உள்ளது. மேலும் நடைபாதைகளில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

8:40 PM

ரூ.450க்கு மலிவான எல்பிஜி கேஸ் சிலிண்டர் கிடைக்கும்.. அடேங்கப்பா உண்மையா? பொய்யா?

தற்போது ரூ.450க்கு மலிவான எல்பிஜி சிலிண்டர் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது உண்மையா? வதந்தியா? என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

7:39 PM

ரயில் டிக்கெட்டுகளில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் 50% வரை தள்ளுபடி.. வேற மாறி அறிவிப்பு..!!

இந்தியாவில், கோவிட்க்கு முன், மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் 40 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது, ஆனால் இந்த தள்ளுபடி கோவிட் நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

7:09 PM

கம்மி விலையில் டூர்.. குளிர்காலத்தில் குடும்பத்துடன் ஜாலியாக பயணம் - எங்கெல்லாம் போலாம் தெரியுமா?

ஐஆர்சிடிசி குளிர்காலத்திற்கான 29 கூல் டூர் பேக்கேஜ்களைக் கொண்டு வருகிறது. வெளிநாட்டிலும் சுற்றுலா பயணம் செய்யலாம். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

6:34 PM

ரொம்ப விலை கம்மி.. இந்தியாவில் விற்பனையாகும் 5 மலிவான மின்சார ஸ்கூட்டர்கள் இவைதான்..

இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனையாகும் 5 மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி இங்கே பாருங்கள்.

5:44 PM

புதிய குற்றவியல் சட்ட மசோதா.. 150 ஆண்டுகள் பழமையான சட்டம் - உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு !!

இரண்டு புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களை மக்களவை நிறைவேற்றியது. இது தண்டனையை விட நீதியில் கவனம் செலுத்துகிறது என்று அமித்ஷா கூறியுள்ளார்.

5:44 PM

தாறுமாறாக அதிகரிக்கும் ஹோட்டல் வாடகை.. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவால் குவியும் முன்பதிவு

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜனவரியில் ஹோட்டல் அறை வாடகை 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

4:34 PM

மக்களவையில் இருந்து இன்றும் 2 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: மொத்த எண்ணிக்கை 143!

நாடாளுமன்ற மக்களவையில் இருந்து இன்றும் இரண்டு எம்.பி.க்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

3:51 PM

எக்மோர் வந்தடைந்த ரயில் பயணிகள்!!

Rescued passengers from Railway Station have safely arrived at Railway. Our dedicated team is on standby, providing essential food packages & our caring doctor provides medical assistance to the needed passengers. pic.twitter.com/bHwXx4SJR8

— Southern Railway (@GMSRailway)

2:45 PM

ஃபாஸ்டேக்கில் தவறாக கழிக்கப்படும் பணத்தை எப்படி திரும்பப் பெறுவது?

ஃபாஸ்டேக் தவறாக கழிக்கப்படும் பணத்தை திரும்பப் பெறுவது எப்படி என்பது பற்றி இங்கு காணலாம்

1:36 PM

சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்ல

சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்

1:14 PM

இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கே?

இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை மம்தா பானர்ஜி முன்மொழிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

12:45 PM

ராஷ்மிகாவின் Deep Fake வீடியோ பரப்பியவர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் - சிக்கியது எப்படி?

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில் அதுதொடர்பாக டெல்லி போலீசார் 4 பேரை மடக்கி பிடித்துள்ளனர்.

12:01 PM

எம்.பிக்கள் இடைநீக்கம்: டிசம்பர் 22இல் இந்தியா கூட்டணி நாடு தழுவிய போராட்டம்!

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் நாளை மறுநாள் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

11:56 AM

தளபதி 68 படத்தின் டைட்டில் என்ன? தயாரிப்பாளர் கொடுத்த ஸ்பெஷல் அப்டேட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தின் டைட்டில் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், அதுகுறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்துள்ளார்.

11:37 AM

அமெரிக்க மண்ணில் படுகொலை சதித்திட்டம்: மவுனம் கலைத்த பிரதமர் மோடி!

அமெரிக்க மண்ணில் படுகொலை சதித்திட்டம் தீட்டியதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்

11:11 AM

பிக்பாஸ் சீசன் 7-ல் என்னோட சப்போர்ட் இவருக்கு தான்... தினேஷின் மனைவி ரச்சிதா போட்ட பதிவால் ஷாக் ஆன ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு பிடித்த போட்டியாளர் யார் என்கிற தகவலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தினேஷின் மனைவி ரச்சிதா.

11:00 AM

ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த கர்ப்பிணி பெண் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வரப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

10:57 AM

பொதுத்தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை.. அமைச்சர் அன்பில் மகேஷ்

10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை. பள்ளிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ததற்கு பின்பாக பள்ளிகள் திறக்கப்படும். தென் மாவட்டங்களில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கான பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்த பின்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். 

10:49 AM

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் ரூபாய் அதிகரிப்பு; மத்திய அரசு எடுத்த முடிவுகளால் அதிரடி மாற்றம்!

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் ரூபாய் அதிகரித்துள்ளதாக உலக வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது

10:20 AM

நல்லது செஞ்சது குத்தமா? மீட்பு பணியில் ஈடுபட்டதை விமர்சித்தவர்களுக்கு மாரி செல்வராஜ் கொடுத்த நெத்தியடி ரிப்ளை

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொண்ட மாரி செல்வராஜ்-ஐ சிலர் விமர்சித்து வந்த நிலையில், அதற்கு அவர் சூசகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

9:55 AM

Today Gold Rate in Chennai: விடாமல் ஜெட் வேகத்தில் அடிச்சு தூக்கும் தங்கம் விலை! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:32 AM

மதுரையில் இருந்து புறப்படும் குமரி- சென்னை ரயில்

குமரி - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதுரையில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

9:28 AM

இது டைட்டிலை விட பெருசு... பிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக விசித்ராவுக்கு வழங்கப்பட்ட ஸ்பெஷல் விருது..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள விசித்ராவுக்கு இதுவரை எந்த சீசனிலும் கிடைக்காத ஒரு விருது கிடைத்திருக்கிறது.

8:56 AM

திருச்செந்தூர் கோயில் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மழை வெள்ளத்தில் சிக்கியதால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கின்றனர். 

8:53 AM

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் மற்றும் காய்கறி மார்க்கெட் வெளியே காய்கறி விற்பனை தொடங்கியது

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், தூத்துக்குடி காய்கறி சந்தையில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வியாபாரிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் மாநகராட்சி அலுவலகம் மற்றும் காய்கறி மார்க்கெட் வெளியே காய்கறி விற்பனை தொடங்கியுள்ளது.

8:51 AM

வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்க பணியில் இந்திய ராணுவம்

நெல்லை, தூத்துக்கடி மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றனர். தற்போது வெள்ளம் மெல்ல மெல்ல வடிய தொடங்கியதை அடுத்து வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளனர். 

8:43 AM

சிறப்பு ரயில்கள் இயக்கம்!!

Hope on the tracks! 🚆

Special train rolls out of Vanchi Maniyachi to Chennai Egmore rescuing stranded passengers from Srivaikuntam with medical and catering teams on board. pic.twitter.com/NvKKEgvI7G

— Southern Railway (@GMSRailway)

8:40 AM

நெல்லையில் ரயில் நிலையத்தில் ரயில்கள் இயக்கம்!!

மூன்று நாட்களுக்குப் பின்னர் நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் சேவை துவங்கியது. முதல் ரயில் 20924 காந்திதாம் - திருநெல்வேலி இடையிலான ரயில் நேற்றிரவு 11.05 மணிக்கு இயக்கப்பட்டது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

8:36 AM

மணிரத்னத்துக்கே மவுசு போச்சா? போன வருஷம் நம்பர் 1.. ஆனா இந்த வருஷம் இப்படி ஆயிடுச்சே! டாப் 5 டைரக்டர்ஸ் லிஸ்ட்

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிரிபுதிரியான வெற்றிப்படங்களை கொடுத்து டாப் 5 இயக்குனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரபலங்கள் யார் என்பதை பார்க்கலாம்.

8:26 AM

குற்றால அருவிகளில் குளிக்க தடை

தென்காசியில் பெய்த கனமைழ காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் 4வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

8:26 AM

3 நாட்களுக்கு பின் தூத்துக்குடிக்கு விமான சேவை தொடங்கியது

கனமழை வெள்ளத்தால் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக சென்னை - தூத்துக்குடி விமான சேவை ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று மீண்டும் விமான சேவை தொடங்கியது. 

8:24 AM

இன்று மாலை சனிப்பெயர்ச்சி விழா

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா இன்று நடைபெறுகிறது. இன்று மாலை 5.20 மணிக்கு சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். 

8:14 AM

நெல்லையில ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் வெள்ளநீர் சூழ்ந்த நிலையில், கடந்த ஞாயிறு இரவு முதல் நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது. 

7:31 AM

இபிஎஸ் கோட்டையில் வேட்டை! முன்னாள் எம்.எல்.ஏவை தட்டித் தூக்கிய பாஜக! குஷியில் அண்ணாமலை! அதிர்ச்சியில் அதிமுக!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தனது ஆதரவாளர்களுடன் கே.பி.ராமலிங்கம் முன்னிலையில் பாஜக இணைந்த சம்பவம் எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

7:30 AM

சேதம் ரொம்ப அதிகம்! தமிழகத்துக்கு ரூ.12,659 கோடி தேவை! பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் முக்கிய கோரிக்கை இதுதான்!

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ள நிவாரணத்திற்கு அவசர நிதியாக ரூ.2,000 கோடி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

11:25 PM IST:

மத்திய அரசு தங்கம் தொடர்பான முதலீட்டு திட்டத்தில் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன் மூலம் 500 ரூபாய் அளவுக்கு தள்ளுபடி கிடைக்கும்.

10:43 PM IST:

பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு முதல்வருக்கு ஆளுநர் அறிவுரையா? என்று கேள்வி எழுப்பி ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது.

10:05 PM IST:

அமைச்சர் பொன்முடி வழக்கில் தண்டனை விவரம் நாளை காலை 10:30க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

8:59 PM IST:

அயோத்தியின் சாலைகளில் தமிழ் மற்றும் தெலுங்கில் பலகைகள் நிறுவப்பட உள்ளது. மேலும் நடைபாதைகளில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

8:40 PM IST:

தற்போது ரூ.450க்கு மலிவான எல்பிஜி சிலிண்டர் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது உண்மையா? வதந்தியா? என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

7:39 PM IST:

இந்தியாவில், கோவிட்க்கு முன், மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் 40 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது, ஆனால் இந்த தள்ளுபடி கோவிட் நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

7:09 PM IST:

ஐஆர்சிடிசி குளிர்காலத்திற்கான 29 கூல் டூர் பேக்கேஜ்களைக் கொண்டு வருகிறது. வெளிநாட்டிலும் சுற்றுலா பயணம் செய்யலாம். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

6:34 PM IST:

இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனையாகும் 5 மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி இங்கே பாருங்கள்.

5:44 PM IST:

இரண்டு புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களை மக்களவை நிறைவேற்றியது. இது தண்டனையை விட நீதியில் கவனம் செலுத்துகிறது என்று அமித்ஷா கூறியுள்ளார்.

5:44 PM IST:

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜனவரியில் ஹோட்டல் அறை வாடகை 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

4:34 PM IST:

நாடாளுமன்ற மக்களவையில் இருந்து இன்றும் இரண்டு எம்.பி.க்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

3:51 PM IST:

Rescued passengers from Railway Station have safely arrived at Railway. Our dedicated team is on standby, providing essential food packages & our caring doctor provides medical assistance to the needed passengers. pic.twitter.com/bHwXx4SJR8

— Southern Railway (@GMSRailway)

2:45 PM IST:

ஃபாஸ்டேக் தவறாக கழிக்கப்படும் பணத்தை திரும்பப் பெறுவது எப்படி என்பது பற்றி இங்கு காணலாம்

1:36 PM IST:

சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்

1:14 PM IST:

இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை மம்தா பானர்ஜி முன்மொழிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

12:45 PM IST:

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில் அதுதொடர்பாக டெல்லி போலீசார் 4 பேரை மடக்கி பிடித்துள்ளனர்.

12:01 PM IST:

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் நாளை மறுநாள் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

11:56 AM IST:

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தின் டைட்டில் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், அதுகுறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்துள்ளார்.

11:37 AM IST:

அமெரிக்க மண்ணில் படுகொலை சதித்திட்டம் தீட்டியதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்

11:11 AM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு பிடித்த போட்டியாளர் யார் என்கிற தகவலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தினேஷின் மனைவி ரச்சிதா.

11:00 AM IST:

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த கர்ப்பிணி பெண் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வரப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

10:57 AM IST:

10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை. பள்ளிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ததற்கு பின்பாக பள்ளிகள் திறக்கப்படும். தென் மாவட்டங்களில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கான பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்த பின்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். 

10:49 AM IST:

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் ரூபாய் அதிகரித்துள்ளதாக உலக வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது

10:20 AM IST:

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொண்ட மாரி செல்வராஜ்-ஐ சிலர் விமர்சித்து வந்த நிலையில், அதற்கு அவர் சூசகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

9:55 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:32 AM IST:

குமரி - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதுரையில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

9:28 AM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள விசித்ராவுக்கு இதுவரை எந்த சீசனிலும் கிடைக்காத ஒரு விருது கிடைத்திருக்கிறது.

8:56 AM IST:

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மழை வெள்ளத்தில் சிக்கியதால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கின்றனர். 

8:53 AM IST:

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், தூத்துக்குடி காய்கறி சந்தையில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வியாபாரிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் மாநகராட்சி அலுவலகம் மற்றும் காய்கறி மார்க்கெட் வெளியே காய்கறி விற்பனை தொடங்கியுள்ளது.

8:51 AM IST:

நெல்லை, தூத்துக்கடி மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றனர். தற்போது வெள்ளம் மெல்ல மெல்ல வடிய தொடங்கியதை அடுத்து வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளனர். 

8:43 AM IST:

Hope on the tracks! 🚆

Special train rolls out of Vanchi Maniyachi to Chennai Egmore rescuing stranded passengers from Srivaikuntam with medical and catering teams on board. pic.twitter.com/NvKKEgvI7G

— Southern Railway (@GMSRailway)

8:40 AM IST:

மூன்று நாட்களுக்குப் பின்னர் நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் சேவை துவங்கியது. முதல் ரயில் 20924 காந்திதாம் - திருநெல்வேலி இடையிலான ரயில் நேற்றிரவு 11.05 மணிக்கு இயக்கப்பட்டது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

8:36 AM IST:

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிரிபுதிரியான வெற்றிப்படங்களை கொடுத்து டாப் 5 இயக்குனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரபலங்கள் யார் என்பதை பார்க்கலாம்.

8:26 AM IST:

தென்காசியில் பெய்த கனமைழ காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் 4வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

8:26 AM IST:

கனமழை வெள்ளத்தால் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக சென்னை - தூத்துக்குடி விமான சேவை ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று மீண்டும் விமான சேவை தொடங்கியது. 

8:24 AM IST:

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா இன்று நடைபெறுகிறது. இன்று மாலை 5.20 மணிக்கு சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். 

8:14 AM IST:

தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் வெள்ளநீர் சூழ்ந்த நிலையில், கடந்த ஞாயிறு இரவு முதல் நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது. 

7:31 AM IST:

சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தனது ஆதரவாளர்களுடன் கே.பி.ராமலிங்கம் முன்னிலையில் பாஜக இணைந்த சம்பவம் எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

7:30 AM IST: