தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

09:17 PM (IST) Nov 04
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், சுமார் 80 கோடி ஏழை மக்கள் ஒவ்வொரு மாதமும் ரேஷன் பெறுகிறார்கள்.
08:46 PM (IST) Nov 04
இந்த அம்சங்களின் மூலம் வாட்ஸ்அப் (WhatsApp) சாட்டை நிமிடங்களில் மாற்றலாம். எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
08:25 PM (IST) Nov 04
நடிகை குஷ்பூ தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு போட்டுள்ள பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது. மேலும் படிக்க
08:24 PM (IST) Nov 04
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து, நடிகர் பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டுள்ளதாக, சில நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் படிக்க
08:23 PM (IST) Nov 04
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியல் அப்டேட். மேலும் படிக்க
08:23 PM (IST) Nov 04
கவின் பிக்பாஸ் போட்டியாளராக இருந்த போது, அவரை பார்க்க வந்த பிரதீப் ஏன், கவினை அடித்தேன் என்று முதல் முறையாக கூறியுள்ள தகவல் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. மேலும் படிக்க
07:46 PM (IST) Nov 04
ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் அற்புதமான எஸ்யூவி கார்களின் மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
07:18 PM (IST) Nov 04
கருணாநிதி நூற்றாண்டு முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி பயணம் தொடங்கியது. இந்த நிகழ்வில் 4 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
06:19 PM (IST) Nov 04
டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலமும் அரசாங்கத்திடம் இருந்து வட்டி பெறலாம். இந்த திட்டத்தின் மூலம் 2.50% வட்டி பெறலாம். முழுமையான விவரங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
05:46 PM (IST) Nov 04
125சிசிக்கு குறைவான அதிக மைலேஜ் பைக்குகள் பட்டியலை இங்கு பாருங்கள். விலை குறைந்த பைக்கின் அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
05:25 PM (IST) Nov 04
தீபாவளி, விளக்குகளின் திருவிழா, இந்தியாவில் மிகவும் துடிப்பான மற்றும் குறிப்பிடத்தக்க பண்டிகைகளில் ஒன்றாகும். விளக்குகள், வானவேடிக்கைகள் என இந்த திருவிழாவை கண்டு அனுபவிக்க இந்த நான்கு இந்திய நகரங்களுக்குச் செல்ல வேண்டும்.
04:24 PM (IST) Nov 04
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12:58 PM (IST) Nov 04
தூத்துக்குடி புதுமணத் தம்பதி கார்த்திகா - மாரிசெல்வம் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய கருப்பசாமி, பரத் ஆகிய 2 குற்றவாளிகள் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பெண் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் நேற்று கைதான நிலையில், இக்கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12:15 PM (IST) Nov 04
சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
10:54 AM (IST) Nov 04
சென்னையில் இன்று முதல் வாகனங்களுக்கு புதிய வேக கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இருச்சக்கர வாகனங்கள் அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்தில்தான் பயணிக்கலாம். மூன்று சக்கர வாகனங்கள் அதிகபட்சமாக 40 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது. குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் 30 கி.மீ வேகத்திற்குள் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
09:57 AM (IST) Nov 04
சென்னை குன்றத்தூரில் அரசு பேருந்தில் மாணவர்களை தாக்கிய நடிகையும், பாஜக பிரமுகருமான நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
08:34 AM (IST) Nov 04
ஜப்பானில் இருப்பதை போல தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஹெல்த் வாக் சாலைகள் அமைக்கும் திட்டத்தை சென்னை பெசன்ட் நகரில் இன்று அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.
08:06 AM (IST) Nov 04
நேபாளத்தில் நேற்று நள்ளிரவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது, இது டெல்லி-என்சிஆர், பீகார் ஆகிய இடங்களில் உணரப்பட்டது. இதனையடுத்து நேபாளில் நிலநடுக்கம் காரணமாக 70 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
07:27 AM (IST) Nov 04
தொடர் கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
07:25 AM (IST) Nov 04
கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
07:24 AM (IST) Nov 04
சென்னை, திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு தொடர்பான 40 இடங்களில் வருமான வரித்துறை 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
07:20 AM (IST) Nov 04
சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
07:19 AM (IST) Nov 04
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வருகை புரிந்து வடகிழக்கு பருவமழை குறித்து எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
07:19 AM (IST) Nov 04
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கும்மிடிப்பூண்டி பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.